இந்தியாவின் அடுத்த தலைமை நீதிபதியாக பதவி ஏற்க உள்ள நீதிபதி யு.யு.லலித், உச்ச நீதிமன்றத்தின் வேலை நேரத்தைப் பற்றி முக்கிய கருத்து ஒன்றைக் கூறியுள்ளார். நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் தங்கள் நாளை சீக்கிரம் தொடங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, குறிப்பிட்ட நேரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக விசாரணைக்காக  கூடிய போது நீதிபதி UU லலித் இவ்வாறு கூறினார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குழந்தைகள் காலை ஏழு மணிக்கு பள்ளிக்கு செல்ல முடியும் என்றால், நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் ஏன் காலை 9 மணிக்கு தங்கள் நாளைத் தொடங்க முடியாது என்று உச்ச நீதிமன்ற நீதிபதி யு.யு.லலித் கருத்துத் தெரிவித்ததாக பிடிஐ செய்திகள் தெரிவிக்கின்றன. நீதிபதிகள் லலித், எஸ் ரவீந்திர பட் மற்றும் சுதன்ஷு துலியா ஆகியோர் அடங்கிய அமர்வு வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு, உச்ச நீதிமன்றத்தின் வழக்கமான வேலை நேரத்தை விட ஒரு மணி நேரம் முன்னதாகவே வெள்ளிக்கிழமை பணியைத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.


நீதிபதி யு.யு.லலித், பள்ளிக் குழந்தைகள் அதிகாலையில் தங்கள் பள்ளிகளுக்கு செல்லும் நிலையில்,  நாமும் நீதிமன்ற நடவடிக்கைகளை தினமும் காலை 9 மணிக்குத் தொடங்க வேண்டும் என்று கூறினார். 


ஜாமீன் மனு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, வழக்கின் விசாரணையின் முடிவில் வழக்கத்தை விட முன்னதாக விசாரணை பணியை தொடக்கியதற்காக பெஞ்சை பாராட்டியதை அடுத்து இந்த கருத்து கூறப்பட்டது. 


மேலும் படிக்க | விஜய் மல்லையாவுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு; உச்ச நீதிமன்றம் வழங்கிய முக்கிய தீர்ப்பு


தற்போது தலைமை நீதிபதியாக பதவி வகிக்கும் என்.சி.வி. ரமணாவுக்கு அடுத்தபடியாக பதவி ஏற்க இருக்கும் நீதிபதி லலித், நீதிமன்றங்களை சீக்கிரம் தொடங்கினால், அன்றைய வேலைகளை சீக்கிரமாக முடித்துவிடலாம் என்றும், மாலையில் நீதிபதிகள் அடுத்த நாள் வழக்கு தொடார்பாக கோப்புகளை படிக்க அதிக நேரம் கிடைக்கும் என்றும் கூறினார்.


"நீதிமன்றங்கள் காலை 9 மணிக்கு தங்கள் வேலையைத் தொடங்கி 11.30 மணிக்கு எழுந்து அரை மணி நேர இடைவெளிக்கு பின், மதியம் 2 மணிக்கு அன்றைய வேலையை முடிக்கலாம். இதைச் செய்வதன் மூலம், நீதிபதிகள் மாலையில் அடுத்த நாளுக்கான பணிகள் தொடர்பாக  பணிகளை மேற்கொள்ள அதிக நேரம் கிடைக்கும்." லலித் கூறினார்.


புதிய வழக்குகள் மற்றும் நீண்ட விசாரணைகள் தேவைப்படாத வழக்குகள் மட்டுமே  இது போன்ற ஏற்பாடுகள் செயல்படும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதி மேலும் கூறினார்.


மேலும் படிக்க | இந்தியாவிற்குள் நுழைந்த குரங்கு அம்மை; ‘இந்த’ அறிகுறிகள் இருந்தால் எச்சரிக்கை தேவை


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ