அலட்சியத்துக்கு அபராதம் 4000 கோடி ரூபாய்! அரசுக்கு ஃபைன் போட்ட பசுமைத் தீர்பாயம்
NGT Penalize Bihar Government: பீகார் மாநில அரசுக்கு 4,000 கோடி அபராதம் விதித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம், அபராதத் தொகையை இரண்டு மாதங்களுக்குள் டெபாசிட் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது
பீகார் மாநில அரசுக்கு 4,000 கோடி அபராதம் விதித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம், அபராதத் தொகையை இரண்டு மாதங்களுக்குள் டெபாசிட் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. அபராதத் தொகையை இரண்டு மாதங்களுக்குள் 'ரிங்-ஃபென்ஸ்' கணக்கில் டெபாசிட் செய்து, தலைமைச் செயலாளரின் அறிவுறுத்தலின்படி மாநிலத்தில் கழிவு மேலாண்மைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று என்ஜிடி தலைவர் நீதிபதி ஏ.கே.கோயல் அமர்வு உத்தரவிட்டது.
பீகார் அரசுக்கு 4,000 கோடி அபராதம் விதித்த NGT, காரணம் என்ன?
NGT செய்திகள்: திட மற்றும் திரவக் கழிவுகளை அறிவியல் பூர்வமாக மேலாண்மை செய்யத் தவறியதற்காக பீகாருக்கு 4,000 கோடி ரூபாய் சுற்றுச்சூழல் அபராதம் விதித்துள்ளது தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (NGT). என்ஜிடி தலைவர் நீதிபதி ஏ.கே.கோயல் அமர்வு, அபராதத் தொகையை இரண்டு மாதங்களுக்குள் 'ரிங்-ஃபென்ஸ் கணக்கில்' டெபாசிட் செய்து, தலைமைச் செயலாளரின் அறிவுறுத்தலின்படி மாநிலத்தில் கழிவு மேலாண்மைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.
ரிங்-ஃபென்ஸ் கணக்கில் வைப்புத்தொகையின் ஒரு பகுதி குறிப்பிட்ட நோக்கத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. நீதிபதி சுதிர் அகர்வால் மற்றும் நீதிபதி அருண் குமார் தியாகி மற்றும் நிபுணர் உறுப்பினர்களான அஃப்ரோஸ் அகமது மற்றும் செந்தில் வேல் ஆகியோரும் இந்த பெஞ்சில் இடம்பெற்றுள்ளனர்.
மேலும் படிக்க | PAN Card Limit: 2 பான் கார்ட் வைத்து இருந்தால் இவ்வளவு தண்டனையா?
ரிங்-ஃபென்ஸ் கணக்கு என்றால் என்ன?
ரிங்-ஃபென்ஸ் கொள்கை என்பது பராமரிப்பு செலவு என்றும் பொஉள் கொள்ளலாம். இந்தக் கொள்கையானது, இடத்திற்கு இடம் மாறுபடும். உதாரணமாக, ஒரு பெரிய மியூச்சுவல் ஃபண்டில் தோல்வியை அடுத்து, பங்குச் சந்தைக் கட்டுப்பாட்டாளர் செபி (SEBI), ஒவ்வொரு திட்டத்தின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளை 'ரிங்-ஃபென்ஸ்' செய்ய அனைத்து மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்திற்கும் உத்தரவிட்டதைக் குறிப்பிடலாம்.
ஆங்கிலேயே ஆட்சியில் உருவாக்கப்பட்டக் கொள்கையாகும். இது அவர்களின் சொந்த பிரதேசங்களைப் பாதுகாப்பதற்காக அண்டை நாடுகளின் எல்லைகளைப் பாதுகாப்பதை உள்ளடக்கியது. இது மராட்டியர்களுக்கும் மைசூர் சாம்ராஜ்யத்திற்கும் எதிரான போரில் முமுமையாக பயன்படுத்தப்பட்டது.
உதாரணமாக, கிழக்கிந்திய கம்பெனி தனது கூட்டாளிகளின் பாதுகாப்பை வலுப்படுத்த துருப்புக்களை அனுப்பும்போது, படையினரின் பராமரிப்புக்கான செலவுகளை சம்பந்தப்பட்ட கூட்டாளிகளே ஏற்க வேண்டும்.
தேசிய பசுமை தீர்பபாயம் என்ன சொன்னது?
"சட்டத்தின் ஆணையை மீறி, குறிப்பாக உச்ச நீதிமன்றம் மற்றும் இந்த தீர்ப்பாயத்தின் தீர்ப்புகளை மீறி, திரவ மற்றும் திடக்கழிவுகளை அறிவியல் பூர்வமாக மேலாண்மை செய்யத் தவறியதற்காக, மாசுபடுத்துபவர் ஊதியக் கொள்கையின் கீழ், பீகார் மாநிலத்தின் மீது, 4,000 கோடி ரூபாய் செலவை விதிக்கிறோம். பெஞ்ச் கூறியது.
மேலும் படிக்க | Manipur Violence: பற்றி எரியும் மணிப்பூரைக் காப்பாற்றுங்கள்! பிரதமருக்கு கோரிக்கை
அபராதத்தொகை எதற்கு பயன்படுத்தப்படும்?
இந்த அபராதத் தொகையானது திடக்கழிவு செயலாக்க வசதிகள் அமைப்பதற்கும், பழைய கழிவுகளை சுத்திகரிப்பு செய்வதற்கும், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைப்பதற்கும், சிறந்த கழிவு மேலாண்மையை உறுதி செய்வதற்கும் பயன்படுத்தப்பட வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
'பீகாரில் நகர்ப்புற கழிவுகள்'
ஒரு நாளைக்கு 4,072 மெட்ரிக் டன் சுத்திகரிக்கப்படாத நகர்ப்புறக் கழிவுகள் மற்றும் 11.74 லட்சம் மெட்ரிக் டன் பழைய கழிவுகளை நிர்வகிக்கும் சுமை பீகாரில் உள்ளது என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் குறிப்பிட்டது. மாநிலத்தில் திரவக் கழிவு உற்பத்தி மற்றும் சுத்திகரிப்பு ஆகியவற்றில் ஒரு நாளைக்கு 2,193 மில்லியன் லிட்டர் இடைவெளி இருப்பதாக அவர் கூறினார்.
ஈரமான கழிவுகளை பொருத்தமான இடங்களில் உரமாக்குவதற்கு சிறந்த மாற்று வழிகளை பீகார் மாநில அரசு ஆராய வேண்டும் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் அமர்வு பரிந்துரைத்தது.
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கான செலவின அளவு, பரவலாக்கப்பட்ட/வழக்கமான அமைப்புகள் அல்லது பிறவற்றில் உள்ள உண்மையான செலவுகளைக் கருத்தில் கொண்டு மதிப்பாய்வு செய்யப்பட வேண்டும் என்று தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | Aadhaar Card Photo Change: ஆதார் அட்டையில் உள்ள புகைப்படத்தை மாற்ற எளிய வழிகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ