புதுடெல்லி: பாரதிய ஜனதா அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று காரசாரமாக நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோதி மக்களவையில் இன்று(ஆகஸ்ட் 10) பேசியபோது, எதிர்க்கட்சிகளின் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு பிரதமர் பதிலளித்தார். தனது உரையைத் தொடங்கும்போது பேசிய பிரதமர் மோதி, இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கடவுளின் ஆசியாக கருதுவதாக பிரதமர் கூறினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எதிர்க்கட்சிகளின் ‘இண்டியா’ கூட்டணி சார்பில் மத்திய அரசுக்கு எதிராக மக்களவையில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான மீதான விவாதம் நேற்று முன்தினம் தொடங்கி, இன்று மூன்றாவது நாளாக தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. 
 
பொதுமக்களிடம் நாங்கள் சென்றபோது, எதிர்க்கட்சிகள் மீது  நம்பிக்கையில்லா தீர்மானத்தை, மிகவும் நம்பிக்கையுடன் அறிவித்தோம். எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம் எங்களுக்கு அனுகூலமானது என்று கூறிய பிரதமர், கடந்த 2018-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது நான் பேசும்போது ஒன்றைக் குறிப்பிட்டேன். ‘இந்தச் சோதனை எங்களுக்கானது அல்ல; எதிர்க்கட்சிகளுக்கானது’ என்பதை நினைவுகூர்ந்தார்.


மேலும் படிக்க | ’டார்கெட் திமுக’ நிர்மலா சீதாராமன் முதல் ஸ்மிருதி இரானி வரை - அனல் பறக்கும் நாடாளுமன்றம்


அடுத்து வந்த நாடாளுமன்றத் தேர்தலில் அவர்கள் தோல்வியை சந்தித்தார்கள், அதேபோல, இப்போது எதிர்கட்சிகள் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம், எங்களுக்கு  2024 தேர்தலில் பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிர்ஷ்ட்டத்தைக் கொண்டுவந்து தரும், மேலும், பழைய சாதனைகளை முறியடித்து, மக்களின் ஆசியுடன் மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று தெரிவித்தார்.


வடகிழக்கு மாநிலத்தில் மோதல்கள் எப்படி தொடங்கியது, என்ன நடந்தது என்பது குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா புதன்கிழமை விரிவான பதில் அளித்தார். மெய்தே மற்றும் குகி ஆகிய இரு சமூகங்களுக்கிடையேயான வன்முறையைத் தடுக்க கடந்த இரண்டு மாதங்களில் மையம் என்ன செய்தது? என்று அவர் விளக்கினார்.



இன்று, நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான பிரதமர் மோடி பல விஷயங்களை பேசினாலும், அவற்றின் முக்கிய சாரம்சமாக, உரையின் 10 முக்கிய அம்சங்களை பார்ப்போம்.


1. எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா பிரேரணை எங்களுக்கு அதிர்ஷ்டமானது. கடந்த முறை இதேபோல நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்த பிறகு, பாஜக தலைமையில் போட்டியிட்ட அணி, மாபெரும் வெற்றியைப் பெற்றது. எனவே, இந்த நம்பிக்கையில்லா தீர்மானாம் பாஜக அணிக்கு சுபமானது.


2. எதிர்கட்சிகளுக்கு எல்லா விஷயமும் அரசியல் மட்டுமே. அவர்களுக்கு இருப்பது அதிகாரப் பசி மட்டுமே. அதனால்தான் பாஜகவும், என்.டி.ஏவும் கடந்தத் தேர்தலில முன்பை விட அதிக இடங்களைப் பெற்றோம்.


மேலும் படிக்க | முதலில் தக்காளி இப்போது வெங்காயம்.. எகிற இருக்கும் விலை! எவ்வளவு தெரியுமா?


3. நாட்டின் இளைஞர்கள் மீது எதிர்க்கட்சிகளுக்கு அக்கறை இல்லை. எதிர்க்கட்சிகளுக்கு பதவி ஆசை மட்டுமே உள்ளது, எதிர்க்கட்சிகளுக்கு பொதுமக்கள் நலனில் அக்கறை இல்லை.


4. ஊழலை தீவிரமாக செய்யும் நண்பரின் ஆலோசனையின் பேரில் எதிர்க்கட்சிகள் இந்தத் தீர்மானத்தைக் கொண்டுவந்துள்ளனர். 5 ஆண்டுகளில் எதிர்க்கட்சிகள் இன்னமும் மாறவில்லை. பீல்டிங்கில் எதிரணியினர் இருந்தாலும், அவர்களின் ஒவ்வொரு தாக்குதலையும் ஆளுங்கட்சி, பவுண்டரிகளாகவும், சிக்ஸர்களாகவும் விளாசுகிறது.


5. எதிர்கட்சி நண்பர்களுக்கு ஆசை அதிகமாகிவிட்டது. அவர்களுடைய புத்தகங்களும் கணக்குகளும் மோசமடைந்துவிட்டன, அவர்கள் எங்களிடம் கணக்கு கேட்கிறார்கள். ஆனால், எதிர்க்கட்சிகள் நாட்டிற்கு ஏமாற்றத்தையே கொடுத்துள்ளது.


6. இந்த முறை ஆதிர் ரஞ்சன் சவுத்ரிக்கு பேச வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஆதிர் ரஞ்சன் பேசுவதில் வல்லவர். அவரை  காங்கிரஸ் மீண்டும் மீண்டும் அவமதிக்கிறது. தொடர்ந்து காங்கிரஸால் ஓரம் கட்டப்படும் ஆதிர் ரஞச்ன் சவுத்ரிக்கு அனுதாபங்கள்.


மேலும் படிக்க | நடிகர் பிரகாஷ் ராஜ் அமர்ந்த இடத்தை கோமியம் ஊற்றி சுத்தப்படுத்திய மாணவர்கள்..!


7. இந்தக் காலகட்டம் இந்தியாவின் ஒவ்வொரு கனவையும் நிறைவேற்றப் போகிறது. இந்தியாவுக்கு இது முக்கியமான நேரம். இது புதிய ஆற்றல், புதிய உற்சாகம் மற்றும் புதிய தீர்மானத்தின் காலம். இந்த காலகட்டத்தின் விளைவு இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு இருக்கும்.


8. கடின உழைப்பால் நாடு புதிய உச்சங்களை எட்டும். நாம் நமது இளைஞர்களை நம்ப வேண்டும். இந்திய இளைஞர்களின் கனவுகளை நனவாக்க அவர்களுக்கு வாய்ப்புகளை வழங்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இளைஞர்களுக்காக ஊழலற்ற அரசு செயல்படுகிறது.


 9. 30 ஆண்டுகளுக்குப் பிறகு 2014ல் முழுப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைந்தது. பின்னர் 2019-லும் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. பின்னர் மீண்டும் நாட்டை புதிய உயரத்திற்கு கொண்டு சென்றோம்.


10. வெளிநாடுகளில் நாட்டுக்கு எதிராக சிலர் சதி செய்கிறார்கள். வெளிநாடுகளில் நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த சதி நடக்கிறது. இந்தியாவின் நல்ல விஷயங்களைக் கேட்க எதிர்க்கட்சிகள் தயாராக இல்லை.


பிரதமர் பல்வேறு விஷயங்களை பேசினாலும், நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது காங்கிரஸ் உட்பட எதிர்கட்சிகளுக்கு விரிவாக பதிலளித்தார். 


மேலும் படிக்க | ராகுல் காந்தி பிளையிங் கிஸ் கொடுத்தாரா? ஸ்மிருதி இரானி குற்றச்சாட்டு: வீடியோ ஆதாரம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ