கர்நாடக மாநிலம் ஷிவமோகாவில் உள்ள எம்.வி.கல்லூரிக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் நேற்று (செவ்வாய்க்கிழமை, ஆக., 9) வருகை தந்தார். இதையடுத்து அந்த இடத்தைச் சுத்திகரிப்பதற்காக மாணவர்கள் மாட்டு கோமியத்தை வளாகத்தைச் சுற்றி தெளித்தனர். இந்த சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரகாஷ் ராஜ் கலந்து கொண்ட நிகழ்ச்சி-கடும் போராட்டம்:
கர்நாடகாவில் உள்ள ஷிவமோகாவின் பிரபலமான கல்லூரிகளுள் ஒன்று, எம்.விஸ்வேஸ்வரய்யா கல்லூரி. இந்த கல்லூரியில், 'தியேட்டர், சினிமா மற்றும் சமூகம் குறித்த உரையாடல்' என்ற தலைப்பில் நேற்று ஒரு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சி, கல்லூரிக்குள் உள்ள நிகழ்ச்சி அரங்கில் நடைபெற்றது. இதற்கு மாணவர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், “கல்லூரிக்குள் தனியார் நிகழ்ச்சி ஏன் நடத்தப்பட்டது?” என்றும் கேள்வி எழுப்பினர். பலர் எதிர்ப்பு தெரிவித்ததால் அவர்களை தவிர்த்து இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவத்த மாணவர்களோடு, வெளி ஆட்களும் சேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, போராட்டக்காரர்கள் உள்ளே நுழையாமல் இருக்க கல்லூரிக்கு வெளியே தடுப்புகள் போடப்பட்டதால், அவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
மேலும் படிக்க | பாலியல் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அரசு வேலை இல்லை... அரசின் அதிரடி நவடிக்கை!அ
“வெளியாட்களும் கலந்திருந்தனர்..”
பிரகாஷ் ராஜ்ஜிற்கு எதிராக போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில் பலர் கல்லூரி மாணவர்களே இல்லை எனவும் அவர்களுடன் வெளியாட்களும் கலந்திருந்தனர் என்றும் கல்லூரியின் கண்காணிப்பாளர் சிவமொக்கா கூறினார். வெளிநபர்களின் பின்னணி இதுவரை கண்டறியப்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.
இந்தி, தமிழ் மற்றும் பிற பிராந்திய மொழி படங்களில் எதிர்மறையான கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமான பிரகாஷ் ராஜ், மத்திய அரசையும் ஆளும் பாரதிய ஜனதா கட்சியையும் (பாஜக) கடுமையாக விமர்சிப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | முதலில் தக்காளி இப்போது வெங்காயம்.. எகிற இருக்கும் விலை! எவ்வளவு தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ