இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிராவை அடுத்து, தற்போது ஜெய்ப்பூரில் 9 பேருக்கு தென்னாப்பிரிக்காவின் ஓமிக்ரான் மாறுபாடு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 4 பேர் தென்னாப்பிரிக்காவிலிருந்து திரும்பியவர்கள், மற்ற 5 பேர் அவர்களுடன் தொடர்பில் வந்தவர்கள். அனைவருக்கும் நடத்தப்பட்ட பரிசோதனையில் Omicron தொற்று பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அனைவரது நிலையும் சீராக  இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மகாராஷ்டிராவிலும் தொற்று பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன
முன்னதாக, மகாராஷ்டிராவில் மேலும் 7 ஓமிக்ரான் வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில் பிம்ப்ரியில் மேலும் 6 வழக்குகளும், புனேவில் மேலும் 1 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதை அடுத்து மகாராஷ்டிராவில் இதுவரை மொத்தம் 8 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், கொரோனாவின் இரண்டாவது அலையின் தாக்கம் மகாராஷ்டிரவில் அதிக அளவில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஒரே நேரத்தில் 7 பேருக்கு தொற்று உறுதியானது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது ஜெய்ப்பூரிலும் புதிய தொற்று பாதிப்பு உறுதியானதை அடுத்து பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.


ALSO READ Breaking! Omicron Alert: டெல்லியிலும் நுழைந்துவிட்டது ஒமிக்ரான் வைரஸ்


ராஜஸ்தானில்  9 பேர் கொரோனாவின் புதிய மாறுபாட்டான ஓமிக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவச் செயலர் வைபவ் கலாரியா, தென்னாப்பிரிக்காவிலிருந்து வந்த அந்த குடும்பத்தினரை RUHS மருத்துவமனையில் ஏற்கனவே அனுமதித்துள்ளதாகத் தெரிவித்தார். அவருடன் தொடர்பில் இருந்த மேலும் 5 பேருக்கும் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்களும் RUHS இல் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த குடும்பத்தினர் உட்பட அவருடன் தொடர்பு கொண்ட 34 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், 9 பேருக்கு கொரோனாவின் புதிய மாறுபாட்டான ஓமிக்ரான் பாசிட்டிவ் இருப்பதும், மீதமுள்ள 25 பேருக்கு நெகடிவ் என்றும் மருத்துவச் செயலாளர் கூறினார்.  சிகார் மாவட்டத்தில் உள்ள அஜித்கரைச் சேர்ந்த ஒரு குடும்பமும் அந்தக் குடும்பத்துடன் தொடர்பில் இருந்ததாக அவர் கூறினார். சிகாரில் அந்த 8 பேரையும் கண்டுபிடித்தது பரிசோதனை செய்ததில், அவர்கள் அனைவருக்கும் கொரோனா நெகட்டிவ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.


ALSO READ இந்தியாவில் வயது வந்தோரில் பாதி பேருக்கு 2 டோஸ் தடுப்பூசி வழங்கி சாதனை!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR