Watch: பாலியல் துன்புறுத்தல் செய்த மருத்துவரை வெளுத்து வாங்கிய நர்ஸ்...!
பயிற்சி பெரும் செவிலியருக்கு பாலியல் துன்புறுத்தல்; மருத்துவரை சரமாரியாக வெளுத்து வாங்கிய செவிலியர்கள்.
பயிற்சி பெரும் செவிலியருக்கு பாலியல் துன்புறுத்தல்; மருத்துவரை சரமாரியாக வெளுத்து வாங்கிய செவிலியர்கள்.
பீகார் மாநிலத்தில் செயல்பட்டு வரும் ஒரு மருத்துவமனையில், பயிற்சி பெரும் செவிலியர் ஒருவர் மருத்துவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக புகார் செய்துள்ளனர். இந்நிலையில், குற்றம் சாட்டப்பட்ட மருத்துவரை செவிலியர்கள் செருப்பால் சரமாரியாக தாக்கும் காட்சி வீடியோவை ANI நிறுவனம் ட்விட்டரில் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
இந்த சம்பவம், பீகார் கதிர்காரின் சதர் மருத்துவமனையில் நடந்தது, அங்கு இரண்டாம் ஆண்டு பயிற்சி பெற்ற நர்ஸ் ஒருவரை டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. அந்த மருத்துவரை செவிலியர்கள் பொது காலணியால் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
மேலும், இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்டவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பாதுகாப்பிற்காக மருத்துவமனையில் காவல்துறையினர் பணியில் உள்ளனர்.
இது குறித்து காவல்துறையினர் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த வீடியோ காட்சி கீழே இணைக்கப்பட்டுள்ளது...!