பெங்களூரு: கர்நாடக முதல்வராக 2வது முறையாக பதவியேற்றார் சித்தராமையா. கர்நாடக துணை முதல்வராக டி.கே.சிவக்குமார் பதவியேற்றார். கர்நாடக மாநில ஆளுநர் தாவர்சந்த் முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் பிற அமைச்சர்களுக்குப் பதவி பிரமாணம் செய்து வைத்தார். ஸ்ரீ கண்டீரவா ஸ்டேடியத்தில் மீண்டும் முடி சூட்டிக் கொண்ட காங்கிரஸ் கட்சித் தலைவர்களுடன் இந்தியா முழுவதும் இருந்து வந்திருந்த அரசியல் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மகிழ்ச்சியான தருணத்தைப் பகிர்ந்து கொண்டனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கர்நாடக முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் கார்கே, முன்னாள் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, காங்கிரஸ் மாநிலத்தின் பல முதல்வர்கள் மற்றும் தலைவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.


தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட பல தமிழகத் தலைவர்கள், கர்நாடக மாநில அமைச்சரவை பதவியேற்பு விழாவில் பங்கேற்றனர்.


தலைவர்களுக்கு 'இசட் பிளஸ்' பாதுகாப்பு 


கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மற்றும் அமைச்சர்களின் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்ற தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களுக்கு ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு வழங்க போலீசார் நடவடிக்கை எடுத்திருந்தனர். நேற்று கன்டீரவா ஸ்டேடியம் முழுவதும் அங்குலம், அங்குலமாக போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். 


மேலும் படிக்க | கர்நாடக சிம்மாசனத்தில் சித்தராமையா! மதி மந்திரிகளுடன் துணை முதலமைச்சரும் தயார்


தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பீகார் முதல்வர் நிதிஷ்குமார், துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், என்சிபி தலைவர் சரத் பவார், மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே என நாடு முழுவதிலும் உள்ள பல மாநில முதலமைச்சர்களும், அமைச்சர்களும் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.


நிகழ்ச்சியில் பேசிய ராகுல் காந்தி, காங்கிரஸின் வெற்றிக்குப் பிறகு, இந்த தேர்தலில் காங்கிரஸ் எப்படி வென்றது என்று பல விஷயங்கள் எழுதப்பட்டன, வெவ்வேறு பகுப்பாய்வுகள் செய்யப்பட்டன என்றும், ஆனால் நாங்கள் ஏழைகள், தலித்துகள், ஆதிவாசிகள் மற்றும் பின்தங்கியவர்களுடன் நின்றதால் காங்கிரஸ் வெற்றி பெற்றது என்று நான் கூற விரும்புகிறேன் என்று தெரிவித்தார்.


மேலும், எங்களிடம் உண்மை இருந்தது. பாரதிய ஜனதாவிடம் பணம், போலீஸ் என அனைத்தும் இருந்தது ஆனால் கர்நாடக மக்கள் அனைத்து அதிகாரங்களையும் தோற்கடித்தனர். நாங்கள் உங்களுக்கு 5 வாக்குறுதிகளை அளித்துள்ளோம் என்று சொன்ன காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் ராகுல் காந்தி அந்த வாக்குறுதிகளை பட்டியலிட்டார்.


மேலும் படிக்க: கர்நாடகா: முதல்வர் சித்தராமையாவுக்கு முன் இருக்கும் 5 முக்கிய சவால்கள்!


காங்கிரஸின் வாக்குறுதிகள்


குடும்பத் தலைவருக்கு 2000 ரூபாய்


200 யூனிட் இலவச மின்சாரம்


10 கிலோ இலவச அரிசி


மகளிருக்கு இலவச பஸ் பயணம்


வேலையில்லா பட்டதாரிகளுக்கு 3 ஆயிரம் ரூபாயும் டிப்ளமோ படித்தவர்களுக்கு 1500 ரூபாய் உதவித் தொகை


நாங்கள் பொய்யான வாக்குறுதிகளை வழங்க மாட்டோம் என்று கூறியிருந்தேன். நாங்கள் சொல்வதைச் செய்கிறோம். அடுத்த 1-2 மணி நேரத்தில், கர்நாடக அரசின் முதல் அமைச்சரவை கூட்டம் நடக்கும், அந்த கூட்டத்தில் இந்த 5 வாக்குறுதிகள் சட்டமாக மாறும் என்று உறுதியளித்தா ர்ராகுல் காந்தி.


மேலும் படிக்க | Karnataka Govt: கர்நாடக புதிய அமைச்சரவையில் மல்லிகார்ஜுன மகன் பிரியங்க் கார்கே


"உங்களுக்கு தூய்மையான, ஊழலற்ற ஆட்சியை வழங்குவோம்" என்று புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கர்நாடக அரசின் பதவியேற்பு விழாவிற்குப் பிறகு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசினார்.


அதோடு, முன்னாள் பாரத பிரதமர், பாரத ரத்னா திரு. ராஜிவ்காந்தி அவர்களின் 32-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, ஸ்ரீபெரும்புதூரில்  நாளை (21.5.2023) ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணியளவில் நடைபெறவுள்ள அஞ்சலி நிகழ்ச்சியில் தலைவர் ராகுல்காந்தி அவர்கள் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது, தவிர்க்க முடியாத காரணங்களால் அவரது வருகை ரத்து செய்யப்பட்டதாக தமிழக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.


நீண்ட காலத்திற்கு பிறகு, காங்கிரஸ் வெற்றிப் பாதையில் நடைபோடத் தொடங்கியுள்ள நிலையில், ஸ்ரீபெரும்புதூர் ராஜிவ் காந்தி நினைவிடத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கே.எஸ்.அழகிரி அவர்கள் தலைமையில், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு. கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ., முன்னிலையில் கீழ்க்கண்டவாறு நிகழ்ச்சிகள் நடைபெறும் என்று காங்கிரஸ் கட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


மேலும் படிக்க: Karnataka: முதல்வர் தேர்வில் கட்சித் தலைமையின் கட்டளையை ஏற்ற கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ