நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மின் ஒளி சிலையை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி!
ஆங்கிலேயே ஏகாதிபத்தியத்தை ஒழிக்க ராணுவ வீரர்களைத் திரட்டி பெரும் போர் புரிந்த இந்திய விடுதலை போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், அவர்களின் பிறந்த நாள் விழா ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 23ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
ஆங்கிலேயே ஏகாதிபத்தியத்தை ஒழிக்க ராணுவ வீரர்களைத் திரட்டி பெரும் போர் புரிந்த இந்திய விடுதலை போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், அவர்களின் பிறந்த நாள் விழா ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 23ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் 125வது பிறந்தநாள் என்பது கூடுதல் சிறப்பாகும்.
சுதந்திர போராட்டத்திற்காக இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கிய நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களுக்கு, தில்லியில் உள்ள இந்தியா கேட் பகுதியில் கிரானைட் கல்லால் ஆன பிரம்மாண்ட சிலை அமைக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி முன்னதாக அறிவித்திருந்தார். நேதாஜி சுபாஷ் சந்திர போஸுக்கு இந்தியா பெரிதும், கடமைப்பட்டுள்ள நிலையில் இந்த புதிய சிலை, அவரது அடையாளமாக இருக்கும் என பிரதமர் கூறியுள்ளார்.
ALSO READ | குடியரசு தின கொண்டாட்டம் இனி ஜனவரி 23ம் தேதியில் தொடங்கும்: மத்திய அரசு அறிவிப்பு
நேதாஜியின் சிலை ஹாலோகிராம் எனப்படும் மின் ஒளி வடிவில் அங்கு திறந்து வைக்கப்படும் எனவும், நேதாஜியின் பிரம்மாண்ட கிராணைட் சிலை அமைக்கும் பணி முடிவடையும் வரை மின் ஒளி சிலை அங்கு திரையிடப்படும் எனவும் அவர் தெரித்தார். மின் ஒளி வடிவிலான சிலை நேதாஜியின் 125வது பிறந்த நாளான ஜனவரி 23ஆம் தேதி திறந்து வைக்க உள்ளேன் எனவும் பிரதமர் நரேந்திர மோடிட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
மேலும், ஒவ்வொரு ஆண்டும், ஜனவரி 26ம் தேதி குடியரசு தின விழா விமரிசையாக கொண்டாடப்படும் நிலையில், இது தொடர்பான கொண்டாட்டங்களை மத்திய அரசு ஜனவரி 24ம் தேதியே தொடங்கி விடும் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த ஆண்டு முதல் இதில் புதிய மாற்றத்தை மத்திய அரசு கொண்டு வர உள்ளது. அதாவது, குடியரசு தின விழாவுடன் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாளையும் கொண்டாடும் வகையில் மத்திய அரசு முக்கிய முடிவை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | 75 ஆண்டுகளில் முதன்முறையாக குடியரசு தின அணிவகுப்பு 30 நிமிடங்கள் தாமதமாக தொடங்கும்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR