கொடி நாளில் வீரர்களின் தியாகத்தை போற்றி நன்கொடை அளிப்போம்: பிரதமர் மோடி
ஓவ்வொரு ஆண்டும் டிசம்பர் 7ம் தேதி ஆயுதப்படைகளின் கொடி நாளாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் இந்திய இராணுவம் தனது துணிச்சலான வீரர்களின் நலனுக்காக இந்திய மக்களிடமிருந்து நன்கொடைகளை பெறுகிறது.
ஓவ்வொரு ஆண்டும் டிசம்பர் 7ம் தேதி ஆயுதப்படைகளின் கொடி நாளாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் இந்திய இராணுவம் தனது துணிச்சலான வீரர்களின் நலனுக்காக இந்திய மக்களிடமிருந்து நன்கொடைகளை பெறுகிறது. இந்த நாள் ஆயுதப்படை கொடி நாள் என்று அழைக்கப்படுகிறது. இந்த நாள் முதல் முறையாக 1949 ஆம் ஆண்டில் கொண்டாடப்பட்டது. அப்போதிருந்து, இது தொடர்ந்து கொண்டாடப்படுகிறது.
எல்லையில் பனி முகடுகளிலும், அடர்ந்த காடுகளிலும், நம்மை காத்து நிற்கும் படையினரின் நலனுக்காக இந்த நாளின் நிதி திரட்டப்படுகிறது. போரின் போது ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்வது, இராணுவ வீரர்களுக்கும் (Indian Army) அவர்களது குடும்பத்தினருக்கும் கடினமான சூழ்நிலையில் உதவுவது, உடல் உறுப்புக்களை இழந்த வீரர்களின் மறு வாழ்வு பணி, ஓய்வு பெற்ற வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் நலன் ஆகியவற்றுக்காக இந்த நாளில் நிதி திரட்டப்படுகிறது,
இந்த கொடி நாளில் மக்களின் நிதியுதவி, எல்லையில் கடுமையான பனியிலும் குளிரிலும், ஆபத்தான பகுதிகளிலும் துணிச்சலுடன் காவல் காத்து, தனது உயிரை பணயம் வைத்து சேவை செய்யும் நமது படை வீரர்களின் குடும்பங்களுக்கு உதவியாக இருக்கும் என பிரதமர் மோடி (PM Narendra Modi) கூறியுள்ளார்.
கொடி நாள் இன்று அனுசரிக்கப்படுவதை ஒட்டி படை வீரர்களின் தன்னலமற்ற சேவையை போற்றுவோம் என தமிழக ஆளுநர் பன்வாரிலால், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி (Edappadi K Palanaisamy) ஆகியோர் கொடிநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், ‘டிசம்பர் 7 படைவீரர் கொடி நாளில் படைக்களத்தில் விழுப்புண்களை ஏற்று, தமது இன்னுயிரை ஈந்த எண்ணற்ற படைவீரர்களது தியாகத்தையும், சேவையையும் நாம் மனதார போற்றுகின்ற அதே வேளையில், அவர்களுக்கு எல்லா வகையிலும் உதவிகளை நல்குவதற்கு கடமைப்பட்டுள்ளோம். அரும்பாடுபட்டு பெற்ற விடுதலையை காப்பாற்றும் பெரும் பணியில் ஈடுபட்ட முப்படை வீரர்களின் குடும்பத்தாரின் நலனைக் காப்பதில் தமிழ்நாடு என்றென்றும் முன்னணியில் திகழ்கின்றது." என்றார்.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் (Banwari lal Purohit), தனது அறிக்கையில், ”கொடிநாளுக்கான நம் பங்களிப்புகள் நம் உணர்வின் அடையாளமாகவும், துணிச்சல் மிகு வீரர்களுக்கு நாம் அளிக்கும் ஆதரவிற்கான சான்றாகவும் அமைகிறது. முப்படை வீரர்கள், முன்னாள் வீரர்களுக்கும் அவர்களது குடும்பத்தாருக்கும் உளப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். கொடி நாள் நிதிக்கு பொதுமக்கள் தாராளமாக நன்கொடை வழங்க வேண்டும்” என கூறியுள்ளார்.
ALSO READ | பயங்கரவாத சதியை முறியடித்த டெல்லி போலிஸ்: Encounter-ல் 5 பேர் கைது
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR