ஒரே நாடு ஒரே தேர்தல் நாடாளுமன்ற கூட்டுக்குழுவில் இடம்பெற்ற முக்கிய எம்.பி.க்கள் லிஸ்ட்
Lok Sabha Latest News: ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து விவாதிக்க 31 பேர் கொண்ட நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்கப்பட்டு உள்ளது.
One Nation One Election News In Tamil: நாடாளுமன்றத்தின் மக்களவையில் கடும் எதிர்ப்பை மீறி "ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா" அறிமுகம் செய்யப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அந்த மசோதாவுக்கு 269 எம்.பி.க்கள் ஆதரவாகவும், 198 எம்.பி.க்கள் எதிராகவும் என மொத்தம் 467 எம்.பி.க்கள் தங்கள் வாக்கை செலுத்தினர்.
மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவை
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா நிறைவேற்ற மொத்த உள்ள வாக்குகளில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவை என்ற நிலையில், மசோதாவுக்கு ஆதரவாக 269 வாக்குகள் மட்டுமே கிடைத்தது. தேவையான ஆதரவு கிடைக்காததால் மசோதா நிறைவேற்ற முடியவில்லை. இதன் காரணமாக ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழு பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது.
நாடாளுமன்ற கூட்டுக்குழு விவரங்கள்
ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து பரிசீலிக்க நாடாளுமன்ற கூட்டுக்குழு குறித்து விவரங்கள் வெளியாகி உள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தொடர்பாக 31 பேர் கொண்ட நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்கப்பட்டு இருக்கிறது. கூட்டுக் குழுவில் மக்களவையில் இருந்து 21 பேரும் மாநிலங்களவையில் இருந்து 10 பேரும் இடம் பெற்றிருக்கின்றனர்.
31 பேர் அடங்கிய நாடாளுமன்ற கூட்டுக்குழு
நாடாளுமன்ற கூட்டுக்குழுவில் பிரியங்கா காந்தி, மனிஷ் திவாரி, தர்மேந்திர யாதவ், கல்யாண்பானர்ஜி, செல்வகணபதி, ஹரிஷ் பாலயோகி, விஷ்ணுதத் சர்மா, சுப்ரியா சுலே, ஸ்ரீகாந்த் எக்நாத் ஷிண்டே, அனுராக் சிங் தாக்கூர் உள்ளிட்ட 31 பேர் பெயர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஒரு நாடு ஒரு தேர்தல் ஜேபிசி உறுப்பினர்கள் லிஸ்ட்
-- பி.பி. சௌத்ரி
-- டாக்டர். சி.எம். ரமேஷ்
-- பன்சூரி ஸ்வராஜ்
-- பர்ஷோத்தம்பாய் ரூபாலா
-- அனுராக் சிங் தாக்கூர்
-- விஷ்ணு தயாள் ராம்
-- பர்த்ருஹரி மஹ்தாப்
-- டாக்டர். சம்பித் பத்ரா
-- அனில் பலுனி
-- விஷ்ணு தத் சர்மா
-- பிரியங்கா காந்தி வத்ரா
-- மணீஷ் திவாரி
-- சுக்தேயோ பகத்
-- தர்மேந்திர யாதவ்
-- கல்யாண் பானர்ஜி
-- டி.எம். செல்வகணபதி
-- ஜி.எம். ஹரிஷ் பாலயோகி
-- சுப்ரியா சுலே
-- டாக்டர். ஸ்ரீகாந்த் ஏக்நாத் ஷிண்டே
-- சந்தன் சவுகான்
-- பாலசௌரி வல்லபனேனி
எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு
முன்னதாக ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்யக்கூடாது என்று காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி, திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர். இதைத் தொடர்ந்து இந்த மசோதாவை அவையில் தாக்கல் செய்யலாமா? வேண்டாமா? என்பது குறித்து வாக்கெடுப்பு நடத்த அவைத் தலைவர் ஓம் பிர்லா உத்தரவிட்டார்.
முதல் முறையாக மின்னணு முறையில் வாக்கெடுப்பு
புதிய நாடாளுமன்றத்தில் மின்னணு வாக்கெடுப்பை நடத்துவதற்கான இயந்திரங்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இந்த இயந்திரங்கள் மூலம் முதல் முறையாக மின்னணு முறையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. மக்களவை உறுப்பினர்கள் வாக்களிக்கும் போது பாதி பேரின் இருக்கையில் மட்டும் மின்னனு வாக்கு இயந்திரம் வேலை செய்ததால், மீதி பேர் வாக்குச்சீட்டு முறையில் வாக்களித்தனர்.
மக்களவையில் மசோதா தாக்கல்
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு 269 எம்.பி.க்கள் ஆதரவாகவும், 198 எம்.பி.க்கள் எதிராகவும் வாக்களித்தனர். மசோதாவுக்கு ஆதரவு அதிகமாக கிடைத்ததால், ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை அவையில் தாக்கல் செய்தார் மத்திய சட்டத் துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால்.
நாடாளுமன்ற கூட்டுக்குழு பரிசீலனை
ஆனால் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை நிறைவேற்ற மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவை கிடைக்காததால், நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்ப பாஜக அரசு முடிவு செய்தது.
மேலும் படிக்க - அம்பேத்கரை அவமதித்தாரா அமித் ஷா? பதவி விலக கோரிக்கை... அப்படி என்ன பேசினார் அவர்...?
மேலும் படிக்க - One Nation One Election | ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு ஆதரவாக 269 வாக்குகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ