One Nation One Election: ஒரு நாடு ஒரே தேர்தல் திட்டம் தொடர்பான ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழுவின் பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது நாடு முழுவதும் பேசுபொருளாக உள்ளது. ஒரு நாடு ஒரே தேர்தல் திட்டம் எப்பொழுது அமல் செய்யப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்திய அமைச்சரவை ஒப்புதல்


2014 ஆம் ஆண்டில் மத்தியில் ஆட்சி அமைத்த பாஜாக அரசு ஒவ்வொரு மாநிலத்திற்கும் தேர்தல் நடத்தினால் அதிக செலவினம் ஏற்படுவதாக கூறி ஒரே நாடு ஒரே தேர்தலை நடத்த தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்ட குழு அளித்த பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.


ஒரு நாடு ஒரே தேர்தல் அறிக்கை


ஒரு நாடு ஒரே தேர்தல் தொடர்பாக ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு கடந்த மார்ச் 14 ஆம் தேதி 18,626 பக்கங்கள் கொண்ட பரிந்துரை அறிக்கையை தற்போதைய ஜனாதிபதி திரௌபதி முர்முவிடம் ஒப்படைத்தனர்.


திமுக எதிர்ப்பு.. அதிமுக ஆதரவு


ஒரு நாடு ஒரே தேர்தல் தொடர்பாக பரிந்துரைக்கு ஆதரவாக அதிமுக உள்ளிட்ட 32 கட்சிகள், அதேபோல திமுக உள்ளிட்ட 15 கட்சிகள் எதிர்ப்பும் தெரிவிச்சிருந்தனர். 15க்கும் மேற்பட்ட கட்சிகள் எந்த நிலைப்பாடும் எடுக்காமல் கருத்து இல்லை எனக் கூறியிருந்தனர்.


மேலும் படிக்க - ஒரே நாடு ஒரே தேர்தல்: எந்தெந்த மாநிலங்களுக்கு சிக்கல்? தமிழகத்திற்கு என்ன பாதிப்பு?


பாஜகவுக்கு சிக்கல் வருமா?


ஒரு நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு இருப்பதால், வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இந்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டு நிறைவேற்றப்படும் என எதிர் பார்க்கப்படுகிறது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இரு அவைகளிலும் பெரும்பான்மை இருப்பதால், இந்த சட்டமும், இதற்கான சட்ட திருத்தங்களும் நிறைவேறுவதில் எந்த பிரச்சனையும் இருக்காது என்றே தெரிகிறது. 


17 மாநிலங்களின் ஆட்சி காலம் குறையும்.


ஒருவேளை 2029 ஆம் ஆண்டில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் அமலாகிவிட்டால், தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம், உத்தரபிரதேசம்,  மத்திய பிரதேசம்,, ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ளிட்ட 17 மாநிலங்களின் ஆட்சி காலம் மூன்று ஆண்டுகளுக்கும் குறைவாகவே இருக்கும். 'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்தை கொண்டு வந்தால், பல மாநில அரசு பெரும் பின்னடைவை சந்திக்கும். அப்போது அரசியல் பூகம்பம் வெடிப்பது உறுதி எனத் தெரிகிறது. 


1951 முதல் 1967 வரை


நாடு சுதந்திரம் அடைந்த பின் 1951 ஆம் ஆண்டு முதல் 1967 ஆம் ஆண்டு வரை நாடாளுமன்றத் தேர்தலுடன் அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெற்றது. 


மேலும் படிக்க - 'ஒரே நாடு ஒரே தேர்தல்' பாஜகவுக்கு கூட்டணி கட்சிகளின் ஆதரவு தேவையா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ