அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்: NCRB-ன் பகீர் Report!!
2019 ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிராக மொத்தம் 4,05,861 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது 2018 ஐ விட 7.3% அதிகமாகும்.
புதுடெல்லி: உத்தரப்பிரதேசத்தின் ஹத்ராஸில் பாலியல் பலாத்காரம் (Hathras Rape Case) செய்யப்பட்டவரின் மரணம் குறித்த சீற்றத்திற்கு மத்தியில், தேசிய குற்ற பதிவு பணியகத்தின் (NCRB) ‘க்ரைம் இன் இந்தியா’ 2019 அறிக்கை, பெண்களுக்கு எதிரான பொதுவான குற்றங்கள் நாடு முழுவதும் செங்குத்தான உயர்வைக் கண்டன என்பதை தெளிவுபடுத்துகிறது. 2019 ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிராக மொத்தம் 4,05,861 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது 2018 ஐ விட 7.3% அதிகமாகும்.
திகிலூட்டும் புள்ளிவிவரங்களின்படி, ஒவ்வொரு 16 நிமிடங்களுக்கும் ஒரு பெண் இந்தியாவில் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார். ஒவ்வொரு நான்கு நிமிடங்களுக்கும் ஒரு பெண் தன் கணவன் வீட்டில் கொடுமையை அனுபவிக்கிறார். 2019 ஆம் ஆண்டில், ஒவ்வொரு நாளும் நாட்டில் 88 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகியுள்ளன. பதிவு செய்யப்பட்ட 32,033 கற்பழிப்பு வழக்குகளில் 11% வழக்குகள் தலித் சமூகத்தைச் சேர்ந்தவை.
"IPC-யின் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் கீழ் பெரும்பாலான வழக்குகள் 'கணவர் அல்லது அவரது உறவினர்களால் கொடுமை' என்ற பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்டன. இவற்றின் அளவு 30.9% ஆகும். அதன்பிறகு 'பெண்களின் தன்மானத்தை சீற்றப்படுத்தும் நோக்கத்துடன் பெண்கள் மீதான தாக்குதல்' (21.8%), 'பெண்களின் கடத்தல்' (17.9%) மற்றும் 'பாலியல் பலாத்காரம்’ (7.9%) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2018 ஆம் ஆண்டை விட குறிப்பிடத்தக்க விதத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள 2019 ஆம் ஆண்டு அதிகரித்தன என NCRB பகிர்ந்துள்ள தரவு காட்டுகிறது.
தரவுகளின்படி, ராஜஸ்தான் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் இருந்து அதிகபட்ச பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த ஆண்டு ராஜஸ்தானில் 6,000 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகியுள்ள நிலையில், உத்திர பிரதேசத்தில் 3,065 வழக்குகள் பதிவாகியுள்ளன.
ஒட்டுமொத்த வழக்குகளில் 78.6 சதவீதத்தில் பெண்கள் மற்றும் சிறுமிகள் பலியாகியுள்ள நிலையில், முந்தைய ஆண்டை விட 2019 ல் கடத்தல் மற்றும் கடத்தல் வழக்குகளில் நாடு 0.7 சதவீதம் சரிவை பதிவு செய்துள்ளது. 2018 ஆம் ஆண்டில் பெண் கடத்தல் தொடர்பான 1,05,734 வழக்குகள் பதிவாகின. 2019 ஆம் ஆண்டில் இதுபோன்ற 1,05,037 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ALSO READ: புண்ணியமான பாரத பூமி இப்போது பலாத்காரம் செய்பவர்களின் பூமியாக மாறியுள்ளது-Madras HC
தரவுகள் ஒருபுறமிருக்க, பெண்களுக்கு எதிராக நாளுக்கு நாள் அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமைக் குற்றங்கள் நம்மை கலங்கடிக்கச் செய்கின்றன.
நாடு முழுவதும் இப்படிப்பட்ட சம்பவங்கள் பல நடந்துகொண்டிருக்கின்றன. ஒவ்வொன்றும் நம் மனதை பதபதைக்க வைக்கும் விதத்தில் உள்ளன. கடுமையான பல சட்டங்கள் ஒரு புறம் வந்து கொண்டிருந்தாலும், இவற்றில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை குறைவதாகத் தெரியவில்லை.
அன்றிலிருந்து இன்று வரை எதுவும் மாறவில்லை. என்ன சட்டம் வந்தாலும், யார் ஆட்சிக்கு வந்தாலும், நான் நினைத்தை செய்வேன் என்ற வீராப்புடன் மனசாட்சியை விற்று விட்டு வீதி வீதியாய் அலையும் நபர்கள் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
இதற்கு யார் காரணம்? வீட்டுச் சூழலா, சமூக சீர்கேடா, தனி மனித ஒழுக்கம் என்பது மறைந்து விட்டதா? நமது சமூகம் எங்கே சென்று கொண்டிருக்கின்றது?
இத்தனை கேள்விகளுக்கும் பதிலை நம்மால் தேட முடியுமா? அப்படி தேடி நாம் இவற்றையெல்லாம் சரி செய்வதற்குள் நிலைமை கட்டுக்கடங்காமல் போய் விடாதா?
கேள்விகளே மிஞ்சுகின்றன……
ALSO READ: “அவங்கள Public-கா சுடுங்க”: Hathras Gangrape Case குறித்து Twitter-ல் கங்கணா!!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR