Electricity Bill Payment Fraud: நாளுக்கு நாள் மோசடி செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது பெறும் கவலையை அதிகரித்துள்ளது.  மக்களை ஏமாற்ற மோசடி கும்பல் புதிய புதிய வழிகளை கையாண்டு வருகின்றனர். உங்களுக்கு வேலை வேண்டுமா, இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள், உங்கள் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்பட்டு உள்ளது, அதை அறிந்துக்கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யும் போன்ற மெசேஜ் உங்கள் தொலைபேசிக்கு வரும், அந்த லிங்கை நீங்கள் கிளிக் செய்தால், வங்கி கணக்கில் உள்ள மொத்த பணமும் காலியான சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், தற்போது மோசடி கும்பல் ஒரு புதிய யுத்தியை செயல்படுத்தி உள்ளது. இந்த புதிய மோசடி நாடு முழுவதும் பரவி வருகிறது. அதாவது  மின் கட்டணம் கட்டவில்லை, உடனடியாக மின் கட்டணம் செலுத்துங்கள் அல்லது மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்ற மெசேஜ் அனுப்பப்படுகிறது. அதில் உள்ள லிங்கை கிளிக் செய்தால் உங்கள் வங்கி கணக்கில் இருக்கும் பணம் முழுவதும் காலியாகும். இப்படி ஆன்லைன் மின் கட்டணம் மோசடி (Electricity Bill Payment Scam) மூலம் வாடிக்கையாளர்களை ஏமாற்றி பணத்தைப் திருடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வாடிக்கையாளர்களை எச்சரிக்கையாக இருக்க மின்வாரியம் எச்சரிக்கை


இது தொடர்பாக நாடு முழுவதும் பல்வேறு புகார்கள் அதிகரித்து வரும் நிலையில், மின்வாரியம் வாடிக்கையாளர்களை எச்சரிக்கையாக இருக்கும் படி அறிவுறுத்தி உள்ளது. மின் கட்டணம் மோசடி (Electricity Bill Scam) சம்பந்தமாக உங்களுக்கு வரும் மெசேஜ் எண்ணை சரிபார்க்க வேண்டும் மற்றும் அந்த லிங்க் அதிகாரப்பூர்வமானதா என்பதையும் சரிபாரிக்கவும். அதில் சந்தேகம் இருந்தால், அதை புறக்கணிக்க வேண்டும் என எச்சரித்துள்ளது.


மேலும் படிக்க - மின்கட்டணம் உயர்வுக்கு காரணம் யார்? அதானிக்கு எதிராக ராகுல் கூறிய குற்றச்சாட்டுகள் என்ன?


ஆன்லைன் மின் கட்டணம் மோசடி என்றால் என்ன?


இந்த மோசடியில், ஒரிஜினலாக மின்சாரம் வழங்கும் நிறுவனத்தில் இருந்து அனுப்புவது போலவே, உங்க மின்சார கட்டண விவரங்களை அனுப்பி, மின்கட்டணம் நிலுவையில் இருப்பதாகவும், மின் இணைப்பு துண்டிப்பை தவிர்க்க பணம் செலுத்த வேண்டும் என்றும் கூறுவார்கள். அதே குறுஞ்செய்தியில் பணம் செலுத்துவதற்கான லிங்க் இருக்கும். "மின்சாரம் துண்டிக்கப்படுமே" என பலர் அவசரமாக அந்த லிங்கை கிளிக் செய்து விவரங்களை நிரப்ப முயல்வார்கள். மேலும் அந்த லிங்க்கை கிளிக் செய்து உள்ளே சென்றால், அதிகாரப்பூர்வ மின் நிறுவனத்தின் லோகோ இருக்கலாம், பெறுநரின் பெயர் மற்றும் சரியான மின்சார கணக்கு எண்ணும் இருக்கலாம் என்று இந்தியா டுடே தெரிவித்துள்ளது. அதாவது முதல் பார்வையில் இந்த குறுஞ்செய்தி போலி என்று முத்திரை குத்துவது கடினம்.


மின் கட்டண மோசடியில் சிக்கி சுமார் 4.9 லட்சத்தை இழந்த நபர்


இந்த புதிய மோசடி வழக்கில் சிக்கிய ஒரு நபர் மின்சாரக் கட்டணம் செலுத்த வேண்டும் என நினைத்து அந்த லிங்கை கிளிக் செய்து சுமார் 4.9 லட்சத்தை இழந்துள்ளார். ஏனெனில் அந்த லிங்கில் உங்கள் ஆதார், உங்கள் வங்கிக்கணக்கு விவரங்கள் கேட்டகப்பட்டு இருந்தது. 


மேலும் படிக்க - Zero Electricity Bill: இந்த லைட்டை மட்டும் யூஸ் பண்ணுங்க! எந்த செலவும் இருக்காது!


மின் கட்டண மோசடி செய்தி இப்படி தான் வரும்


"அன்புள்ள வாடிக்கையாளரே உங்களின் மின் இணைப்பு இன்றிரவு 9.30 மணிக்குள் துண்டிக்கப்படும். உங்களின் முந்தைய மாத பில் இன்னும் கட்டவில்லை. உடனடியாக மின்வாரிய அதிகாரியைத் தொடர்பு கொள்ளவும் [10 இலக்க தொலைபேசி எண்] நன்றி, SecyGenl" என்று குறுஞ்செய்தி அனுப்பப்படுவதாக பாதிக்கப்பட்ட பயனர் ஸ்கிரீன் ஷாட்டை வெளியிட்டுள்ளார். மேலும் இந்த மோசடி இத்துடன் முடிவடையவில்லை. மோசடி செய்பவர்கள் உங்கள் எண்ணிற்கு போன் செய்து, உங்களை பணம் செலுத்த கட்டாயப்படுத்துகிறார்கள். 


மின் கட்டண மோசடிகளில் இருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி?


உங்களுக்கு வரும் குறுந்செய்தி பயமுறுத்துவதாக இருந்தாலும், நீங்கள் இணைப்புகளைக் கிளிக் செய்யவோ அல்லது செய்தியில் உள்ள தொலைபேசி எண்ணைத் தொடர்புகொள்ளவோ கூடாது. இது போலியானதா? இல்லையா? என்பதை உறுதிப்படுத்த அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும் அல்லது அதிகாரப்பூர்வ ஹெல்ப்லைன் எண்கள் மூலம் மின்சார அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளவும்.


வங்கி விவரங்களை பகிர வேண்டாம்


மோசடி செய்பவர் பணம் செலுத்துவதற்கு வங்கி விவரங்களைக் கேட்கலாம். அத்தகைய விவரங்களைப் பகிர வேண்டாம் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், மேலும் எந்தவொரு செயலியையும் பதிவிறக்க வேண்டாம். கடைசியாக, இதுபோன்ற மோசடிகளில் நீங்கள் சிக்கினால், அந்த விஷயத்தை சைபர் கிரைம் (Cyber Crime Department) துறைக்கு உடனடியாக தெரிவிக்கவும்.


மேலும் படிக்க - இனிமே உங்களுக்கு கரண்ட் பில் வராது... இந்த ஒரு சாதனம் போதும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ