Parliament Winter Session 2023: நாட்டின் முக்கிய அம்சமாக இருக்கும் நாடாளுமன்றத்தின் பாதுகாப்பில் ஏற்பட்ட தோல்வி குறித்தது விவாதம் நடந்த வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக மேலும் இரண்டு எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர். இன்று (புதன்கிழமை, டிசம்பர் 20), மக்களைவையில் சபாநாயகர் இருக்கைக்கு முன்பாக சென்று, நாடாளுமன்ற மக்களவையில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு விளக்கம் கேட்டும், தாக்குதல் நடத்தியவர்கள் உள்ளே வர அனுமதிச்சீட்டு வழங்கிய பாஜக எம்பி மீது நடவடிக்கை எடுக்க கோரியும் முழக்கமிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களான சி. தாமஸ் மற்றும் ஏஎம். ஆரிப் ஆகிய இரண்டு பேரையும் கூட்டத்தொடரின் எஞ்சிய காலம் முழுவதும் சபாநாயகர் இடைநீக்கம் செய்தார்.  இதுவரை லோக்சபா மற்றும் ராஜ்யசபா எம்.பி.க்கள் 143 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எத்தனை எம்.பி.க்கள் எப்போது இடைநீக்கம் செய்யப்பட்டனர்?


செவ்வாய்கிழமையன்று 49 எம்.பி.க்கள் லோக்சபாவில் இருந்து முழு அமர்விற்கும் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதற்கு ஒரு நாள் முன்னதாக, திங்கள்கிழமை, லோக்சபாவில் இருந்து 33 மற்றும் ராஜ்யசபாவில் இருந்து 45 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். டிசம்பர் 14 அன்று, லோக்சபாவில் இருந்து 13 எம்.பி.க்களும், ராஜ்யசபா இருந்து ஒரு எம்.பி.யும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.


நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல்


கடந்த 2001 ஆம் ஆண்டு டிசம்பர் 13 ஆம் தேதி காலை 11.30 மணி அளவில் பழைய நாடாளுமன்றத்தின் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது. அதை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 13 ஆம் தேதி நினைவு நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. 


நாடு முழுவதும் பரபரப்பு


அதே நினைவு நாளான டிசம்பர் 13 ஆம் மக்களவைக்குள் இருவர் நுழைந்து புகை குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பத்தின் மூளையாக கருதப்படும் லலித் ஜா உள்ளிட்ட 6 பேர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு தற்போது அவர்கள் அனைவரும் போலீஸ் காவலில் உள்ளனர்.


மேலும் படிக்க - Parliament Session 2023: ஒரே நாளில் 33 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்.. ஏன்? எதற்கு? காரணம் இதுதான்


எதிர்க்கட்சிகளின் கோரிக்கை என்ன?


நாடாளுமன்றத்தின் பாதுகாப்பில் ஏற்பட்ட குளறுபடி குறித்து, உள்துறை அமைச்சர் அமித் ஷா அவையில் வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. 


நாடாளுமன்றம் தாக்குதல்: மத்திய அரசு என்ன சொல்கிறது?


அதேநேரத்தில் இந்த பாதுகாப்பு குறைபாடு விவகாரம் லோக்சபா செயலகத்தின் எல்லைக்கு உட்பட்டது என்றும், உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளதாகவும் மத்திய அரசு கூறி வருகிறது. மேலும் இந்த விவகாரத்தில் அரசியல் செய்யக் கூடாது என்றும் மத்திய அமைச்சர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.


எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்ய இதுதான் காரணம்


நாடாளுமன்றத்தின் இருஅவைகளிலும் இருந்து எம்.பி.க்கள் தொடர்ந்து இடைநீக்கம் செய்வதற்கு கடும் கண்டனத்தை எதிர்க்கட்சிகள் பதிவு செய்து வருவதோடு, எந்த விவாதமும் இன்றி முக்கியமான மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு விரும்புவதாகவும், அதனால் தான் எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர் என எதிர்கட்சிகள் எம்.பி.க்கள் குற்றசாட்டி வருகின்றனர். 


வேலையின்மை, அதானி குறித்து விவாதம் இல்லை- ராகுல் காந்தி


இன்று (புதன்கிழமை, டிசம்பர் 20) காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறுகையில், 150 எம்பிக்கள் வெளியில் அமர்ந்துள்ளனர். ஆனால் இதுக்குறித்து எந்த விவாதமும் நடைபெறவில்லை என்று கூறினார். அதேபோல அதானி குறித்து எந்த விவாதமும் நடக்காது. வேலையில்லா திண்டாட்டம் குறித்து விவாதம் இருக்காது, ரஃபேல் விவகாரம் குறித்து விவாதம் இருக்காது. ஆனால் விடியோ விவகாரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக குற்றம்சாட்டினார்.


திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானா்ஜி , துணை குடியரசு தலைவர் ஜகதீப் தன்கா் அவையை வழிநடத்தும் விதத்தை, நடித்துக் காட்டினார். அதுக்குரித்த வீடியோ வைரலாகி வருகிறது. 


இந்த விவாரம் குறித்து செய்தியாளர்கள் ராகுல் காந்தியிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், யாரும் யாரையும்  அவமானப்படுத்தவில்லை. நானும் வீடியோ எடுத்தேன். ஆனால் ஊடகங்கள் தொடர்ந்து அதையே காட்டிக் கொண்டு இருக்கின்றன மற்றும் விவாதம் நடத்துகின்றனர். 150 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர். அதைபற்றி ஊடகங்களில் எந்த விவாதமும் இல்லை" என ராகுல் காந்தி கூறினார்.


மேலும் படிக்க - லோக்சபாவைத் தொடர்ந்து, ராஜ்யசபாவில் இருந்து 45 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ