Parliament Session 2023: ஒரே நாளில் 33 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்.. ஏன்? எதற்கு? காரணம் இதுதான்

Parliament Session 2023: மக்களவையில் இருந்து கூண்டோடு ஒரே நாளில் 33 எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சஸ்பெண்ட். எந்த கட்சியை சேர்ந்த எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்கள்? எதனால் எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்கள்? அதற்கான காரணத்தை பார்ப்போம்.

Written by - Shiva Murugesan | Last Updated : Dec 18, 2023, 05:21 PM IST
Parliament Session 2023: ஒரே நாளில் 33 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்.. ஏன்? எதற்கு? காரணம் இதுதான் title=

Suspends 33 Opposition MPs: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரின் 11வது நாளான இன்றும் (திங்கள்கிழமை, டிசம்பர் 18) நாடாளுமன்றத்தில் பாதுகாப்புக் குளறுபடி விவகாரம் தொடர்பாக விவாதம் கேட்டு மக்களவை மற்றும் ராஜ்யசபாவில் பெரும் அமளி ஏற்பட்டது. லோக்சபாவின் பாதுகாப்பு மீறல் குறித்து இரு அவைகளிலும் (லோக்சபா மற்றும் ராஜ்யசபா) விளக்கம் அளிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றன. இதன் காரணமாக மக்களவையில் இருந்து கூண்டோடு 33 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அதில் காங்கிரஸ் கட்சியின் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி உட்பட 11 காங்கிரஸ் எம்.பி.க்கள், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 9 பேர், தி.மு.க.வை சேர்ந்த 9 பேர் மற்றும் பிற கட்சிகளைச் சேர்ந்த 4 எம்.பி.க்கள் இதில் அடங்குவர்.

நாடாளுமன்ற மக்களவையில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு விளக்கம் கேட்டும் தாக்குதல் நடத்தியவர்கள் உள்ளே வர அனுமதிச்சீட்டு வழங்கிய பாஜக எம்பி மீது நடவடிக்கை எடுக்க கோரி எதிர்கட்சி எம்.பி.,-க்கள் விடாப்பிடியாக இருந்தன. மேலும் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். 

மொத்தம் 47 எம்பிக்கள் சஸ்பெண்ட்

இதனையடுத்து மக்களவையின் குளிர்கால கூட்டத்தொடரில் இருந்து காங்கிரஸ் கட்சியின் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி உட்பட 30 எம்பிக்களை லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா சஸ்பெண்ட் செய்தார். அதேநேரம் சிறப்புரிமைக் குழுவின் அறிக்கை வரும் வரை 3 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். 13 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஏற்கனவே இந்த முழு அமர்வில் இருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவை ஒத்திவைக்கப்பட்டது

மக்களவையில் இன்று அவை நடவடிக்கைகள் தொடங்கியவுடன் சபாநாயகர் ஓம் பிர்லா 15 நிமிடம் உரை நிகழ்த்தினார். இந்த சம்பவத்தில் அரசியல் செய்வது துரதிர்ஷ்டவசமானது என்றார். ஆனால் தொடர்ந்து எதிர்கட்சி எம்பிக்கள் :விளக்கம் அளிக்க வேண்டும்" என அமளியில் ஈடுபட்டதால், சபை நடவடிக்கைகள் நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டு, நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது. எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதையடுத்து, அவை நாளை (செவ்வாய்க்கிழமை) வரை ஒத்திவைக்கப்பட்டது.

இன்று சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்கள் யார்?

ஆ. ராஜா, டி.ஆர்.பாலு, தயாநிதிமாறன், கணேசன் செல்வம், சிஎன் அண்ணாதுரை, டாக்டர் டி சுமதி, எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், கலாநிதி வீரசாமி, ராமலிங்கம் செல்லபெருமாள், திருநாவுக்கரசர், விஜயகுமார் வசந்த், கே.முரளீதரன், கே.சுரேஷ், ஆதிர் ரஞ்சன் சௌத்ரி, கல்யான் பானர்ஜி, முகமது வாசிர், சுனில் குமார் மண்டல்,  என்கே பிரேமச்சந்திரன், சவுகதா ராய், சதாப்தி ராய், அசித் குமார் மால், கௌஷலேந்திர குமார், ஆண்டன் குமார்,  பிரதிமா மண்டல், அமர்சிங், ராஜ்மோகன் உன்னிதன், கௌரவ் கோகோய் ஆகியோர் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

 

டிசம்பர் 14ம் தேதி 14 எம்.பி.க்கள் இடைநீக்கம்

முன்னதாக டிசம்பர் 14 ஆம் தேதி மொத்தம் 14 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதில் 13 பேர் மக்களவை மற்றும் ஒரு ராஜ்யசபா எம்.பி. ஆவார். அவர் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

மாணிக்கம் தாகூர், கனிமொழி, பி.ஆர்.நடராஜன், வி.கே.ஸ்ரீகண்டன், பென்னி பஹானன், கே.சுப்பிரமணியம், எஸ்.வெங்கடேசன், முகமது ஜாவேத் ஆகியோர் மக்களவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர். திரிணாமுல் காங்கிரஸின் டெரெக் ஓ பிரையன் மட்டும் ராஜ்யசபாவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News