இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் ஊச்சகட்டமாக சுமார் 40,425 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 40,425 பேருக்கு கொரோனா பாதிப்பு (COVID-19) பதிவாகியுள்ள நிலையில், இந்தியாவின் மொத்த கோவிட் -19 பாதிப்புகளின் எண்ணிக்கை இன்று 11,18,043-யை எட்டியுள்ளது என்று மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்திற்கு ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது. 


இந்நிலையில், இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,77,618லிருந்து 11,18,043 ஆகவும், கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6,77,423-லிருந்து 7,00,087 ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 26,816-லிருந்து 27,497ஆக உயர்ந்துள்ளது. 


முன்னதாக ஞாயிற்றுக்கிழமை, பிரதமர் நரேந்திர மோடி ஏழு மாநிலங்களின் முதல்வர்களுடன் தொலைபேசியில் தங்கள் மாநிலங்களில் "நிலைமை" குறித்து பேசினார். முதலமைச்சர்கள் நிதீஷ் குமார் (பீகார்), சர்பானந்தா சோனோவால் (அசாம்), ஒய்.எஸ்.ஜகன் மோகன் ரெட்டி (ஆந்திரா), கே சந்திரசேகர் ராவ் (தெலுங்கானா), கே பழனிசாமி (தமிழ்நாடு), ஜெய் ராம் தாக்கூர் (இமாச்சல பிரதேசம்) மற்றும் திரிவேந்திர சிங் (உத்தரகண்ட்) ஆகியோர் தங்களின் மாநில நிலைமையை பிரதமரிடம் விவரித்தனர்.


கொரோனா வைரஸ் மற்றும் அதனை கையாளுதல், வெள்ள நிலைமை மற்றும் அவர்களுடன் பிற பிரச்சினைகள் குறித்து பிரதமர் விவாதித்தார். அவர் அவர்களுடன் அரசு சார்ந்த கவலைகள் பற்றி பேசினார் என்று ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. 


இன்றைய நிலவரப்படி, இந்தியாவில் 3,73,379 பேர் மருத்துவமனையில் சிகித்சை பெற்று வருக்கின்றனர். கோவிட் -19 வேகமாக பரவி வரும் முக்கிய மாநிலங்களில் தமிழகம் ஒன்றாகும். அசாம் மற்றும் பீகார் ஆகிய இரண்டும் வெள்ள பாதிப்பை எதிர்கொள்கின்றன. 


இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்புகளின் மாநில வாரியான தரவு இதோ:


S. No. Name of State / UT Active Cases* Cured/Discharged/Migrated* Deaths** Total Confirmed cases*
1 Andaman and Nicobar Islands 58 145 0 203
2 Andhra Pradesh 26118 22890 642 49650
3 Arunachal Pradesh 455 282 3 740
4 Assam 7919 16023 57 23999
5 Bihar 10044 16308 217 26569
6 Chandigarh 217 488 12 717
7 Chhattisgarh 1608 3775 24 5407
8 Dadra and Nagar Haveli and Daman and Diu 189 414 2 605
9 Delhi 16031 103134 3628 122793
10 Goa 1417 2218 22 3657
11 Gujarat 11312 34901 2142 48355
12 Haryana 6022 19793 349 26164
13 Himachal Pradesh 413 1059 11 1483
14 Jammu and Kashmir 5844 7811 244 13899
15 Jharkhand 2770 2716 49 5535
16 Karnataka 39376 23065 1331 63772
17 Kerala 7067 5371 42 12480
18 Ladakh 173 1003 2 1178
19 Madhya Pradesh 6568 15311 721 22600
20 Maharashtra 129032 169569 11854 310455
21 Manipur 698 1213 0 1911
22 Meghalaya 382 66 2 450
23 Mizoram 117 167 0 284
24 Nagaland 543 445 0 988
25 Odisha 4893 12453 91 17437
26 Puducherry 817 1154 28 1999
27 Punjab 3311 6535 254 10100
28 Rajasthan 7145 21730 559 29434
29 Sikkim 191 92 0 283
30 Tamil Nadu 50297 117915 2481 170693
31 Telangana 12223 32438 415 45076
32 Tripura 1114 1759 5 2878
33 Uttarakhand 1347 3116 52 4515
34 Uttar Pradesh 18256 29845 1146 49247
35 West Bengal 16492 24883 1112 42487
  Total# 390459 700087 27497 1118043