இந்தியா முழுதும் கொரானாவின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. பல மாநிலங்களில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒற்றை நாள் தொற்றின் அளவு மிக அதிகமாக உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாடு முழுவதும் பல இடங்களில் தடுப்பூசிகள், படுக்கைகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் என பலவகைப்பட்ட மருத்துவ வசதிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பல மாநிலங்களில் தொற்றின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே உள்ளது. முன்னெப்போதும் கண்டிறாத அளவுக்கு ஒற்றை நாள் தொற்றின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. 


இந்த நிலையில், நல்லெண்ணம் கொண்ட பலர் தங்கள் வரம்பை மீறி பலவித உதவிகளை செய்து வருகின்றனர். இது போல் மிகவும் பெரிய உதவியை செய்து வரும் ஒரு நபர் சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறார். 


தற்போது பரவி வரும் கொரோனாவின் இரண்டாவது அலையில் பலருக்கு அதிகமாக மூச்சுத் திணறலும் ஏற்படுகின்றது. ஆகையால் நாடு முழுவதும் ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கான (Oxygen Cylinder) தட்டுப்பாடும் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், ஷாஹனவாஸ் என்ற இளைஞர், கொரோனா காரணமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டு அவதிப்படும் நோயாளிகளுக்கு தனது காரை விற்று மருத்துவ ஆக்சிஜன் சிலிண்டர்களை வழங்கி உதவி வருகிறார். 



இரண்டாவது அலையில் (Corona Second Wave) பலருக்கு மூச்சுத் திணறல் ஒரு பெரும் அறிகுறியாக இருந்து வருகிறது. சென்ற ஆண்டு இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு பலருக்கு மூச்சுத் திணறல் மிக அதிகமாகவே உள்ளது. சில இடங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. 


ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசும் மாநில அரசுகளும் பல முயற்சிகளை எடுத்து வருகின்றன. பெரு நிறுவனங்களான டாடா குழுமம், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் ஆகியவையும் ஆக்சிஜன் சிலிண்டர்களை உற்பத்தி செய்து மாநிலங்களுக்கு வழங்கி வருகின்றன. இதுமட்டுமல்லாமல் பல தனிநபர்களும் தங்களால் ஆன உதவிகளை செய்து வருகின்றனர்.


ALSO READ: கடன் வாங்குவீர்களோ, பிச்சை எடுப்பீர்களோ, நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கிடைக்க வேண்டும்: HC காட்டம்


இதற்கு ஒரு மிகச்சிறந்த உதாரணம், மும்பையின் மலாட் நகரில் வசிக்கும் ஷாஹனாவாஸ் ஷேக். 'ஆக்சிஜன் மேன்' என்று தற்போது அந்தப் பகுதியில் பிரபலமாக அவர் அழைக்கப்பட்டு வருகிறார். இந்த தீவிரமான நேரத்தில் மக்களுக்கு உதவுவதற்காக ஷாஹனவாஸ் சில நாட்களுக்கு முன்பு தனது ரூ.22 லட்சம் மதிப்புள்ள எஸ்யூவி காரை விற்றார். அந்த பணத்தில் ஷாஹனவாஸ் 160 ஆக்சிஜன் சிலிண்டர்களை வாங்கி தனது இடத்தில் வைத்துள்ளார். ஆக்சிஜன் சிலிண்டர் உதவி என்று கேட்டு அவரை தொடர்பு கொள்ளும் அனைவருக்கும் உடனே சிலிண்டரை வழங்கி அவர் உதவி வருகிறார். 


கொரோனா (Coronavirus)  காலத்தில் தான் செய்யும் உதவியை முறையாக செய்ய, ஷாஹனவாஸ், குழு ஒன்றை அமைத்து, ஒரு ஹெல்ப்லைன் எண்ணை வெளியிட்டு, ஒரு கண்ட்ரோல் ரூமையும் அமைத்துள்ளார். முறையாக ஷாஹனவாஸ் ஏற்பட்டுத்தியுள்ள வசதிகளால், கட்டுப்பாட்டு அறைக்கு யாரேனும் தொலைபேசியில் அழைத்தால், உடனடியாக அவருக்கு உதவி வந்து சேரும். 


ஷாஹனவாசின் இந்த சேவை தற்போது துவங்கியது அல்ல. சென்ற ஆண்டே அவர் இந்த சேவையை துவக்கி விட்டார். கடந்த ஆண்டு முதல் தற்போது வரை 4000-க்கும் அதிகமானோருக்கு அவரது குழு உதவியுள்ளது. இது மட்டுமல்லாமல், சிலிண்டர்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பதையும் இவரது குழு நோயாளிகளுக்கு விளக்கி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.


ALSO READ: COVID-19 Update: இந்தியாவில் 3,32,730 பேருக்கு தொற்று உறுதி; 2,263 பேர் பலி!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR