பீதியைக் கிளப்பும் படங்கள், ஆக்ஸிஜனுக்காக அல்லாடும் மக்கள், திணறும் நிர்வாகம்

இந்தியாவில் கொரோனா வைரஸின் தொற்று அதிகரித்து வருவதால் மக்களிடையே பீதி பரவி வருகிறது. பல விதமான மருத்துவ வசதிகளுக்கும், பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 

மருத்துவமனைகளில் படுக்கைகளுடன் ஆக்ஸிஜனுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு நகரங்களில் ஆக்ஸிஜன் நிரப்பும் ஆலைகளில் கூட்டம் அலைமோதுகிறது. அனைத்து இடங்களிலும் குழப்பமான சூழலே உள்ளது.

 

1 /5

டெல்லியில் உள்ள முண்ட்காவில் உள்ள ஆக்ஸிஜன் ஆலையில் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை நிரப்ப மக்கள் தொலைதூரத்திலிருந்து வருகிறார்கள். ஏனெனில் மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை உள்ளது.

2 /5

நோயாளிகளுக்கு தேவையான ஆக்ஸிஜனைக் கொண்டு செல்ல, நோயாளிகளின் உறவினர்கள் ஆக்சிஜன் ஆலைகளில் காத்திருக்கும் காட்சியை நாட்டின் பல நகரங்களில் காண முடிகிறது. 

3 /5

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில், 24,638 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் 249 நோயாளிகள் இறந்த நிலையில், கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 12,887 ஐ எட்டியுள்ளது. டெல்லியில் இறப்பு விகிதம் 1.39 சதவீதமாக உள்ளது.  

4 /5

நாட்டின் பல நகரங்களில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதற்கு மத்தியில், மருத்துவமனைகளில் படுக்கைகளுக்கான தட்டுப்பாடு உள்ளது. மேலும் ஆக்ஸிஜன் விநியோகத்திலும் பெரும் பற்றாக்குறை உள்ளது.

5 /5

டெல்லி அரசின் வேண்டுகோளின் பேரில், டெல்லியின் ஆக்ஸிஜன் ஒதுக்கீட்டை 480 மெட்ரிக் ஆக மத்திய அரசு உயர்த்தியது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய அரசிற்கும் டெல்லி உயர் நீதிமன்றத்திற்கும் இதற்காக நன்றி தெரிவித்தார்.