India On Turkey Earthquake: தொடர்ச்சியான மற்றும் கடுமையான நிலநடுக்கத்தால் துருக்கி, சிரியா நாடுகள் உருகுலைந்துவிட்டன. பல்வேறு கட்டடங்கள் இடிந்து, உள்கட்டமைப்புகள் அனைத்து நாசமான நிலையில், சுமார் 5 ஆயிரம் பேருக்கும் மேல் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. 30 ஆயிரத்திற்கும் மேலாக காயமடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மீட்பு பணிகளும், நிவாரண பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பல்வேறு நாடுகளும் துருக்கிக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன. இந்தியாவும், தனது விமானப்படை விமானம் மூலம் துருக்கிக்கு நிவாரணப் பொருள்களை கொண்டு சென்றன.  


அந்த வகையில், நிவாரண நடவடிக்கைகளுக்காக துருக்கிக்கு சென்ற இந்திய விமானப்படை விமானத்திற்கு பாகிஸ்தான் தனது வான்வெளி அணுகலை மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நிவாரண நடவடிக்கையில் துருக்கிக்கு உதவ,  NDRF (இந்திய தேசிய பேரிடர் மீட்புப் படை) குழுக்களின்படி மருத்துவ உதவிக்கு அனுப்புவதாக இந்திய அரசு உறுதியளித்தது. இந்தியா தனது மிகப்பெரிய சரக்கு விமானமான போயிங் தயாரித்த C-17 குளோப்மாஸ்டரை அனுப்பியது.


மேலும் படிக்க | 609-லிருந்து நேரடியாக 2வது இடத்தைப் பிடித்தது எப்படி? அதானிக்கும் மோடிக்கும் என்ன தொடர்பு? -ராகுல் கேள்வி


இவற்றில் முதலாவது விமானம் நவீன துளையிடும் கருவிகள், மருத்துவர்கள் மற்றும் மீட்பு நாய்களுடன் துருக்கியின் அதனா விமான நிலையத்தில் தரையிறங்கியது. தனது வான்வெளியைப் பயன்படுத்த பாகிஸ்தான் அனுமதி மறுத்ததால் இந்திய விமானம் மாற்றுப்பாதையில் செல்ல வேண்டியிருந்தது. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் தெரிவிக்கப்படவில்லை. 


பாகிஸ்தான் தனது வான்வெளியில் நுழைய இந்திய விமானத்தை நிறுத்துவது இது முதல் முறை அல்ல. பாதிப்பிற்கு உள்ளான நாடுகளுக்கு மனிதாபிமான உதவிகளை அனுப்பவதற்காக இந்தியாவின் பல முயற்சிகளுக்கு பாகிஸ்தான் தனது வான்வெளிக்கு அனுமதி மறுத்திருக்கிறது. துருக்கி, உக்ரைன், ஐரோப்பிய நாடுகள் உட்பட மேற்கு நாடுகளில் உள்ள நாடுகளை அடைய பாகிஸ்தான் வான்வெளியில் சென்றால் இந்திய விமானத்தால் எளிதாக செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


2021ஆம் ஆண்டில், ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து, இந்தியா தனது நிலப்பரப்பைப் பயன்படுத்துவதை பாகிஸ்தான் தடுத்தது. ரஷ்யா - உக்ரைன் போரால், உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க கோவிட்-19 மீட்புப் பணிகளின் போது, மிஷன் வந்தே பாரத் என்ற பெயரில் இந்தியா மேற்கொண்டது.


அப்போதும், இந்தியாவில் இருந்து வரும் விமானங்களை பாகிஸ்தான் தனது வான்வெளியைப் பயன்படுத்த அனுமதி மறுத்தது. மேலும் விமான நிறுவனங்கள் உக்ரைனை அடைய நீண்ட பாதையில் செல்ல வேண்டியிருந்தது, இதன் விளைவாக நேரம் மற்றும் எரிபொருள் நுகர்வு அதிகரித்தது என கூறப்படுகிறது. 


மேலும் படிக்க | நெஞ்சை உலுக்கும் வீடியோ: துருக்கி நிலநடுக்கம் - 22 மணிநேர போராட்டம்... பெண் உயிருடன் மீட்பு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ