56 மணி நேர காஷ்மீரின் பம்பூர் துப்பாக்கி சண்டை முடிவுக்கு வந்தது. 2 பயங்கரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஸ்ரீநகரின் புறநகர் பகுதியான பாம்போரா என்ற இடத்தில் மாநில அரசுக்கு சொந்தமான தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிலகத்தின் தலைமை அலுவலகம் அமைந்துள்ளது. இந்த கட்டிட வளாகத்தில் கடந்த திங்கட்கிழமை அதிகாலை பயங்கரவாதிகள் புகுந்தனர். கட்டிட வளாகத்தின் தரைவிரிப்புகளை தீ வைத்து கொளுத்தினர். இதனால் அங்கு பெரும் புகை மண்டலம் உருவானது. இரண்டு அல்லது மூன்று தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாகவும் பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. உடனே அங்கு விரைந்த பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் பயங்கரமான துப்பாக்கிச் சண்டை நீடித்தது. மூன்று தீவிரவாதிகளில் ஒருவன் நேற்று முன்தினம் சுட்டுக் கொல்லப்பட்டான்.


தொடர்ந்து 56 மணி நேரம் நடந்த துப்பாக்கிச் சண்டை முடிவுக்கு வந்ததாக இராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த தாக்குதலில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இருவரும் லஷ்கர் இ–தொய்பா இயக்கத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்பதற்கான ஆதாரம் கிடைத்துள்ளது என அதிகாரிகள் கூறினார்கள்.