பாஜக அலுவலகம் முன் வெங்காயம் விற்ற முன்னாள் எம்.பி!
முன்னாள் எம்.பி.யான பப்பு யாதவ், பாஜக அலுவலகத்துக்கு வெளியே வெங்காயம் விற்ற சம்பவம், பாட்னாவில் அரங்கேறியுள்ளது.
முன்னாள் எம்.பி.யான பப்பு யாதவ், பாஜக அலுவலகத்துக்கு வெளியே வெங்காயம் விற்ற சம்பவம், பாட்னாவில் அரங்கேறியுள்ளது.
சுவை கூட்டும் காய்கறியாக சாப்பாட்டு வகைகளில் வெங்காயம் சேர்க்கப்படுகிறது. தற்போது இந்த வெங்காயத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே செல்கிறது. விலை ஏற்றம் அடைந்துள்ளதால் சில ஓட்டல்களில் வெங்காயத்தை அதிகமாக சேர்த்து செய்யப்படும் உணவு வகைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் பெரிய வெங்காயத்தின் விலை ரூ.100 முதல் 130 வரையிலும், சின்ன வெங்காயத்தின் விலை ரூ.140 முதல் 180 வரையிலும் விற்கப்படுகிறது. இந்த விலை உயர்வை கண்டித்து, முன்னாள் எம்.பி.யும், ஜன அதிகார கட்சி நிறுவனருமான பப்பு யாதவ், பாட்னாவில் உள்ள பாஜக அலுவலகத்துக்கு வெளியே வெங்காயம் விற்றார். ஒரு கிலோ வெங்காயத்தை அவர் 35 ரூபாய்க்கு விற்றார்.
இதையடுத்து, பப்பு யாதவிடம் வெங்காயம் வாங்க, பாஜக அலுவலகம் முன் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் ஆர்வமுடன் குவிந்தனர்.