12th Board Exam: ஜூலை 1 முதல் 12 ஆம் வகுப்புக்களுக்கு மீதமுள்ள பொதுத்தேர்வை நடத்த சிபிஎஸ்இ (CBSE) எடுத்த முடிவுக்கு எதிராக சில பெற்றோர்கள் உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளனர். மீதமுள்ள தேர்வுகளை ரத்து செய்யக் கோரி பெற்றோர்கள் உச்ச நீதிமன்றத்தில் (Supreme Court) மனு தாக்கல் செய்துள்ளனர். மாணவர்கள் உள் மதிப்பீட்டின் அடிப்படையில் தேர்வு முடிவுகளை சிபிஎஸ்இ அறிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதையும் படியுங்கள் | தமிழகத்தில் 10-ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன, அனைவரும் தேர்ச்சி என முதல்வர் அறிவிப்பு


எய்ம்ஸ் (AIIMS) தரவுகளின்படி, வரும் நேரத்தில் கொரோனா வைரஸ் இந்தியாவில் உச்சத்தில் இருக்கும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது. அத்தகைய சூழ்நிலையில் தேர்வுகள் ரத்து செய்யப்பட வேண்டும். இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை எட்டியுள்ளது. இந்த நேரத்தில் தேர்வுகளை (CBSE Board Exam) நடத்துவது மிகவும் ஆபத்தானது என்று மனுவில் கூறப்பட்டுள்ளது. 


இதையும் படியுங்கள் | தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து.


ஜூலை 1 முதல் மீதமுள்ள தேர்வுகளை (Board Exam) நாடு முழுவதும் 1500 மையங்களில் நடத்தப்போவதாக சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. பெற்றோர்கள் சார்பில் மனு தாக்கல் செய்த வழக்கறிஞர் ரிஷி மல்ஹோத்ரா, டெல்லி பல்கலைக்கழகம், ஐ.ஐ.டி போன்ற மதிப்புமிக்க நிறுவனங்கள் எந்தவொரு தேர்வும் நடத்த வேண்டாம் என்று முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார். பல மாநில வாரியங்களும் தேர்வை நடத்தும் முடிவை ரத்து செய்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில், சி.பி.எஸ்.இ. தேர்வுகளை நடத்த எந்த அடிப்படையும் இல்லை என்றார்.


இதையும் படியுங்கள் | இந்தியாவின் சிறந்த பல்கலைக்கழகங்கள் உலக தரவரிசையில் வீழ்ச்சியடைந்தது