தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து...

தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அமைச்சர் கமலக்கண்ணன் அறிவித்துள்ளார்...!

Last Updated : Jun 9, 2020, 03:35 PM IST
தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து...  title=

தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அமைச்சர் கமலக்கண்ணன் அறிவித்துள்ளார்...!

தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் அறிவித்துள்ளார். தமிழகத்தில் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவதாகவும் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி சற்றுமுன் அறிவிப்பு வெளியிட்டார். மேலும், காலாண்டு, அரையாண்டு தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் 80% மதிப்பெண் அளிக்கப்படும். எஞ்சிய 20% மதிப்பெண்கள் மாணவர்களின் வருகை அடிப்படையில் நிர்ணயிக்கப்படும் என அவர் அறிவித்துள்ளார். மேலும், 11 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யபடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.  

இந்நிலையில், புதுச்சேரியிலும் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் அறிவித்துள்ளார். மேலும், அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள் எனவும் கூறியுள்ளார். முன்னதாக, 10- ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழக அரசின் முடிவைப் பொறுத்து முடிவு செய்யப்படும் என புதுச்சேரி அரசு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

READ | தமிழகத்தில் 10-ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன, அனைவரும் தேர்ச்சி: முதல்வர் அறிவிப்பு

இதையடுத்து முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில்... தமிழக பாடத் திட்டங்களின் அடிப்படையிலே புதுச்சேரி அரசிலும் பாடத்திட்டங்கள் பின்பற்றப்பட்டு வருகிறது. தமிழக அரசு 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்வதாக அறிவித்துள்ளதால் புதுச்சேரியிலும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுகிறது. மாணவர்கள் காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் எடுத்த மதிப்பெண்களின் அடிப்படையிலும், வருகைப் பதிவேடு அடிப்படையிலும் தேர்ச்சி கொடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். 

Trending News