Twitter கொள்கையை விட இந்திய சட்டங்கள் மேலானவை : நாடாளுமன்ற நிலைக்குழு
சமூக ஊடகங்கள் மூலம் போலி செய்திகள் , வன்முறையை தூண்டும் வகையிலான, தேச விரோத கருத்துக்கள் பரப்பப்படுவதை தடுக்கும் நோக்கில், புதிய வழிகாட்டு விதிமுறைகளை (New IT Rules) மத்திய அரசு, கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்தது.
சமூக ஊடகங்கள் மூலம் போலி செய்திகள், தேச விரோத கருத்துக்கள் பரப்பப்படுவதை தடுக்கும் நோக்கில், புதிய வழிகாட்டு விதிமுறைகளை (New IT Rules) மத்திய அரசு, கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்தது. மே மாதம் 26ம் தேதி அமலுக்கு வந்துள்ள இந்த புதிய விதிகளுக்கு ட்விட்டரை தவிர அனைத்து சமூக ஊடகங்களும் இணங்கியுள்ள நிலையில், ட்விட்டர் (Twitter) தொடர்ந்து முரண்டு பிடித்து வருகிறது. எனவே ட்விட்டர் நிறுவனம் சட்ட பாதுகாப்பை இழந்தது.
அதாவது, இனி டிவிட்டரில் (Twitter) பதிவிடப்படும் போலி செய்திகள் அல்லது இந்திய இறையாண்மைக்கு எதிரான பதிவுகள், வன்முறையை தூண்டும் பதிவுகள் ஆகியவற்றுக்கு ட்விட்டர் பொறுப்பேற்க வேண்டும். இது தொடர்பாக, பதிவை செய்த சம்பந்தப்பட்ட நபருடன் கூடவே, ட்விட்டர் மீதும் வழக்கு தொடரலாம்.
ALSO READ | Ghaziabad தாக்குதல் வழக்கில் ட்விட்டர் & பத்திரிகையாளர்கள் மீது FIR
இந்நிலையில், விதிமுறைகளை மீறி செயல்பட்ட ட்விட்டர் நிறுவனத்துக்கு ஏன் அபராதம் விதிக்கக் கூடாது என்று ட்விட்டர் நிறுவன பிரதிநிதிகளிடம் நாடாளுமன்ற நிலைக்குழு கேள்வியெழுப்பி உள்ளது.
நாடாளுமன்ற நிலைக்குழு முன்பாக ட்விட்டர் அதிகாரிகள் நேரில் ஆஜராகி இதற்கான விளக்கத்தை அளிக்க வேண்டும் என்றும் சமூக ஊடக தளத்தை தவறாக பயன்படுத்துவதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் விவரிக்க வேண்டும் என்றும் அக்குழுவினர் வலியுறுத்தியுள்ளனர்.
நாடாளுமன்ற நிலைக் குழுவின் தலைவராக காங்கிரஸ் உறுப்பினர் சசி தரூர் உள்ளார். ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் தவறாக செயல்பட்டதற்காக சம்மன் அளிப்பியுள்ள நாடாளுமன்ற நிலைக்குழு நாட்டு மக்களின் உரிமைகளைக் காக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.
குடியரசு தினத்தன்று தில்லி செங்கோட்டையில் நடைபெற்ற வன்முறையை அடுத்து, அதனை தூண்டும் வகையிலான பதிவுகள், போலி செய்திகள் ஆகியவற்றை பதிவிட்ட எத்தனை ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டன என்பது குறித்த விபரங்களை தெரிவிக்குமாறு நாடாளுமன்ற நிலைக்குழு கூறியது.
ALSO READ | உத்திர பிராதேச போலீஸ் ட்விட்டருக்கு நோட்டீஸ்; காவல் நிலையத்தில் ஆஜாராக உத்தரவு
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR