Paytm Payments Bank: ரிசர்வ் வங்கி மூலம் கடுமையான தடைகளை எதிர்கொண்டுள்ள பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கியின் சிக்கல்கள் நாளுக்கு நாள் அதிகமாகி வருகின்றன. வாடிக்கையாளர் கேஒய்சி (Customer KYC) தொடர்பான விதி மீறல்கள் பற்றிய இலட்சக்கணக்கான வழக்குகளும் ரிசர்வ் வங்கி மூலம் கண்டறியப்பட்டுள்ளன. பேடிஎம் பேமென்ட்ஸ் பேங்க் தற்போது எதிர்கொண்டுள்ள பலவிதமான பிரச்சனைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மோசடி நடவடிக்கைகள்


பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கியின் (PPB) செயல்முறைகளை ஆய்வு செய்த இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank), பலவித மோசடி நடவடிக்கைகள் செய்யப்பட்டுள்ளதாக தனது அறிக்கையில் கூறியுள்ளது. பெரிய அளவில் பண மோசடி நடந்திருக்கும் என்ற கவலையை ரிசர்வ் வங்கி வெளிப்படுத்தியுள்ளது. அதிக அளவிலான வாடிக்கையாளர்களின் கேஒய்சி (KYC) மற்றும் பான் வெரிஃபிகேஷன் (PAN Verification) செய்யப்படவில்லை என்பது வங்கியின் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. சில இடங்களில் 100 -க்கும் மேலான வாடிக்கையாளர்கள் ஒரே பேன் எண்ணுடன் இணைக்கப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. இதையும் மிஞ்சும் வகையில் ஒரு சில இடங்களில் 1000க்கும் மேலான வாடிக்கையாளர்களின் கணக்குகள் ஒரே பேன் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளன.


மார்ச் 1 முதல் புதிய ஃபண்டுகளை வங்கி ஏற்க முடியாது


இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த பேமெண்ட்ஸ் பேடிஎம் வங்கியின் செய்தித் தொடர்பாளர், ரிசர்வ் வங்கியின் சமீபத்திய அறிவுறுத்தல்கள் இணக்க செயல்முறையின் (Compliance Process) ஒரு பகுதி என்று கூறியுள்ளார். ப்ரீபெய்ட் இன்ஸ்ட்ருமெண்ட் விஷயத்தில், அனுமதிக்கப்பட்ட குறைந்தபட்ச கேஒய்சி மூலம் பல கோடி ரூபாய் மதிப்பிலான பரிவர்த்தனைகள் செய்யப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கிக்கு தகவல் கிடைத்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 


பல மாதங்களாக பேமெண்ட்ஸ் பேடிஎம் பேங்க் நிர்வாகத்துடன் ரிசர்வ் வங்கிக்கு நடந்த பலவித பேச்சுவார்த்தைகள் மற்றும் கலந்துரையாடல்களுக்கு பிறகு ஜனவரி 31 அன்று, மார்ச் 1 முதல் பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி கணக்குகள் மற்றும் வாலெட்டுகளில் புதிய ஃபண்டுகளை பெற்றுக்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் ஏற்கனவே கணக்கில் உள்ள பணத்தை எடுப்பதற்கும் டிரான்ஸ்ஃபர் செய்வதற்கும் அதாவது பரிமாற்றம் செய்வதற்கும் முன்பு இருந்தது போலவே வசதிகள் தொடரும்.


மேலும் படிக்க | Paytm: பேடிஎம் கணக்கில் பணம் இருக்கா... கணக்கை மூடுவதற்கான எளிய வழிமுறை இதோ..!


ரிசர்வ் வங்கி, பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியில் ஆய்வு செய்ததற்கான காரணம் என்ன?


ரிசர்வ் வங்கி பிறப்பித்துள்ள உத்தரவில் பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி மீது எதற்காக ஆய்வுகள் நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடப்படவில்லை. லைசன்ஸிங் தொடர்பான விதிகளையும் வங்கி பின்பற்றவில்லை என்றும் கூறப்படுகிறது. பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியின் தாய் நிறுவனமான ஒன் 97 கம்யூனிகேஷன் (One97 Communication) நிறுவனத்துடன் நிதி மற்றும் நிதி அல்லாத வணிக தொடர்புகளும் சந்தேகத்திற்கு பாத்திரமாக உள்ளதாக கூறப்படுகிறது. இதைப் பற்றியும் நிதி அறிக்கையில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.


மேற்பார்வை வழிமுறைகள் பின்பற்றப்பட்டனவா? 


Paytm Payments Bank அவ்வப்போது ஆர்பிஐ (RBI) இடமிருந்து பெறப்பட்ட மேற்பார்வை வழிமுறைகளை பின்பற்றி வருவதாக வங்கியின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். ஆனால் ரிசர்வ் வங்கி மூலம் வெளியிடப்பட்டுள்ள தகவல்கள் வேறு விதமாக உள்ளன. இதற்கிடையில் பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்குகள் குறித்து மிகுந்த குழப்பத்திலும் அச்சத்திலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | FASTag பயன்படுத்துபவர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஆர்பிஐ!


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ