அமெரிக்காவில் 24 மணிநேரத்தில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரவுள்ளதாக அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொரோனா தடுப்பூசியான ஃபைசரின் (Pfizer COVID-19 Vaccine) அவசரகால பயன்பாட்டிற்கு அமெரிக்க மருந்துத் துறை (FDA) ஒப்புதல் அளித்துள்ளது. அமெரிக்க குடிமக்களுக்கு அடுத்த 24 மணி நேரத்திற்குள் தடுப்பூசி போடலாம் என்ற அறிக்கையை அதிபர் ட்ரம்ப் (Donald Trump) வெளியிட்டுள்ளார். 


ஃபைசர் (Pfizer) நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பூசியை (Covid Vaccine) அவசரகால பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளிக்குமாறு  வெள்ளிக்கிழமை வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரி மார்க் மெடோஸ் உணவு மற்றும் மருந்து நிர்வாகத் தலைவர் ஸ்டீபன் ஹானுக்கு அழுத்தம் கொடுத்தார். இந்த தடுப்பூசிக்கு FDA-யின் வெளி ஆலோசகர்கள் குழு வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தது. ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இந்த தடுப்பூசிக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.


ALSO READ | அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதி கோரிய இந்தியாவின் முதல் COVID-19 தடுப்பூசி..


ஃபைசரின் கொரோனா தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு FDA ஒப்புதல் வழங்கியவுடன், ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் 24 மணி நேரத்திற்குள் முழு நாட்டிலும் இந்த தடுப்பூசி வழங்கப்படும் என்று கூறினார். இந்த நோய் சீனாவிலிருந்து வந்தது, ஆனால் இப்போது அது அமெரிக்காவில் ஒழிக்கப்படும் என்று டிரம்ப் கூறினார். 



இது குறித்து அவர் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள வீடியோவில் கூறியுள்ளதாவது., “அமெரிக்காவில் அனைவருக்கும் பைசர் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும். பைசர் தடுப்பூசியை அவசரகால அடிப்படையில் பயன்படுத்த FDA அனுமதி அளித்ததற்கு வரவேற்பு தெரிவித்துக் கொள்கிறேன். அமெரிக்காவில் அடுத்த 24 மணி நேரத்திற்குள் கொரோனாவுக்கான முதல் தடுப்பூசி செலுத்தப்படும். மூத்த குடிமக்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன்களப்பணியாளர்களுக்கு முதற்கட்டமாக தடுப்பூசி செலுத்தப்படும். ற்கெனவே அமெரிக்காவின் 50 மாநிலங்களுக்கும் தடுப்பூசி அனுப்புவதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இது வரலாற்றின் மிகப்பெரிய மைல்கல்” என்று அதில் தெரிவித்தார். 


ALSO READ | COVID Vaccine-ன் முதல் தடுப்பூசியை போட்டுக்கொண்டார் இங்கிலாந்தின் 90 வயதான Margaret Keenan


ஏற்கெனவே பிரிட்டன் அரசு கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த தொடங்கிய நிலையில் தற்போது அமெரிக்காவும் பயன்பாட்டுக்கு கொண்டு வர உள்ளது.


உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்... 


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR