கொரோனா வைரஸ் நெருக்கடியை எதிர்கொள்ள பிரதமரின் ‘குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால சூழ்நிலைகளில் நிவாரணம்’ அல்லது 'PM-CARES' நிதியில் இருந்து ரூ.3,100 கோடி ஒதுக்கப்படும் என்று அரசாங்கம் புதன்கிழமை அறிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

"ரூ.3,100 கோடியில், வென்டிலேட்டர்கள் வாங்குவதற்கு சுமார் ரூ.2,000 கோடி, புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் பராமரிப்புக்காக ரூ.1,000 கோடி மற்றும் தடுப்பூசி வளர்ச்சிக்கு ரூ.100 கோடி வழங்கப்படும்" என்று பிரதமர் நரேந்திரா மோடியின் அலுவலகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.


மார்ச் 27, 2020 அன்று உருவாக்கப்பட்ட இந்த அறக்கட்டளை பிரதமர் தலைமையில் உள்ளது மற்றும் அறக்கட்டளையின் மற்ற அலுவலர்களாக பாதுகாப்பு அமைச்சர், உள்துறை அமைச்சர் மற்றும் நிதி அமைச்சர் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.


இந்த தொகுப்பை அறிவிக்கும் போது, ​​பிரதமர் மோடி அனைத்து நன்கொடையாளர்களுக்கும், PM-CARES நிதிக்கு பங்களித்ததில் தாராள மனப்பான்மைக்கு நன்றி தெரிவித்தார், மேலும் இந்த நிதி COVID-19-க்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தை ஆதரிக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.


நாடு முழுவதும் COVID-19 வழக்குகளைச் சமாளிக்க உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக, PM-CARES நிதியிலிருந்து சுமார் ரூ.2000 கோடி செலவில் 50,000 ‘Made-In-India(இந்தியாவில் உருவாக்கப்பட்ட)’ வென்டிலேட்டர்கள் வாங்கப்படும். இந்த வென்டிலேட்டர்கள் அனைத்து மாநிலங்கள் / UT-க்களில் உள்ள அரசு நடத்தும் COVID மருத்துவமனைகளுக்கு, முக்கியமான COVID-19 வழக்குகளுக்கு சிறந்த சிகிச்சைக்காக வழங்கப்படும்  எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


புலம்பெயர்ந்தோர் மற்றும் ஏழைகளின் நலனுக்காக தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்காக, மாநிலங்கள் /UT-க்களுக்கு PM CARES நிதியிலிருந்து மொத்தம் 1,000 கோடி ரூபாய் உதவி வழங்கப்படும்.


இந்த தொகை மாநில அரசுகள் / UT-க்களுக்கு மாவட்ட ஆட்சியர்கள் / நகராட்சி ஆணையர்களின் வசம் வைக்க, தங்குமிட வசதிகளை வழங்குவதில், உணவு ஏற்பாடுகளை செய்வதில், மருத்துவ சிகிச்சையை வழங்குவதில், மற்றும் புலம்பெயர்ந்தோரின் போக்குவரத்து ஏற்பாடுகளை செய்வதில் தங்கள் முயற்சிகளை வலுப்படுத்துவதற்காக வழங்கப்படும்.


பின்வருவனவற்றின் புள்ளிகள் அடைப்படையில் மாநில / UT வாரியான நிதி வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  •  ​​2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மாநில / UT-யின் மக்கள் தொகை - 50%, புள்ளிகள்.

  •  தேதியின்படி நேர்மறை COVID-19 வழக்குகளின் எண்ணிக்கை - 40% புள்ளிகள் மற்றும்

  • அனைத்து மாநிலங்களுக்கும் அடிப்படை குறைந்தபட்ச தொகையை உறுதி செய்ய அனைத்து மாநிலங்களுக்கும் அடிப்படை பங்கு (10% புள்ளிகள்).


சம்பந்தப்பட்ட மாநிலங்களின் மாநில பேரிடர் நிவாரண ஆணையர் / UT-க்கள் மூலம் இந்த நிதி மாவட்ட ஆட்சியர் / மாவட்ட நீதவான் / நகராட்சி ஆணையருக்கு வெளியிடப்படும்.


COVID-19-க்கு எதிரான ஒரு தடுப்பூசி மிகவும் அவசியமான தேவை மற்றும் இந்திய கல்வியாளர்கள், தொடக்க நிறுவனங்கள் மற்றும் தொழில் ஆகியவை அதிநவீன தடுப்பூசி வடிவமைப்பு மற்றும் வளர்ச்சியில் ஒன்றாக செயல்பட்டு வருகின்றன. என்வே, COVID-19 தடுப்பூசி வடிவமைப்பாளர்கள் மற்றும் டெவலப்பர்களை ஆதரிப்பதற்காக, தடுப்பூசி வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கான உதவியாக PM CARES நிதியிலிருந்து ரூ.100 கோடி வழங்கப்படும், இது முதன்மை அறிவியல் ஆலோசகரின் மேற்பார்வையில் பயன்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.