நியூடெல்லி: 2014 பொதுத்தேர்தலில் அமோக வெற்றி பெற்று 2014 மே 26 அன்று பதவியேற்ற பாரதிய ஜனதா கட்சி ஒன்பது ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கிறது.  ஐந்தாண்டு ஆட்சிக்கு பிறகு, அடுத்த பொதுத் தேர்தலிலும் பாஜக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்தபோது, எந்தவித எதிர்கேள்வியும் இல்லாமல், மீண்டும் பிரதமர் மோடிக்கு பாரதிய ஜனதா கட்சி மகுடம் சூடியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


பிரதமர் மோடி இரண்டாவது முறையாக மே 30, 2019 அன்று பதவியேற்றார். தற்போது, பிரதமர் மோடி ஒன்பது ஆண்டுகளாக பிரதமராக இருப்பதை குறிப்பிட்டு, #9YearsOfPMModi, #9YearsOfModiGovtdemocracy என்ற ஹேஷ்டேக்கள் டிவிட்டரில் வைரலாகின்றன.


இதைக் குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி,  ‘எனக்கு பலத்தைத் தருகிறது...’: என ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.



பிரதமராக தான் பதவி வகித்த தனது ஒன்பது ஆண்டுகால ஆட்சியைப் பாராட்டும் மக்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்ட பிரதமர் மோடி, அத்தகைய அன்பைப் பெறும் வகையில் எப்போதும் பணிவாக இருப்பதாக தெரிவித்தார். மேலும் மக்களின் இந்த அன்பே, தனக்கு வலிமையைத் தருவதாகவும் கூறினார். மக்களுக்காக இன்னும் கடினமாக உழைக்க வேண்டும் என்று இந்த அன்பும், நம்பிக்கையும் ஊக்கமளிப்பதாக பிரதமர் தெரிவித்தார்.


மேலும் படிக்க | ₹75 நினைவு நாணயம் வெளியீடு! நாடாளுமன்றத்தின் புதிய கட்டட திறப்புவிழா


பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில், "#9YearsOfModiGovernment இல் காலையிலிருந்து பல ட்வீட்களை நான் பார்க்கிறேன், அதில் 2014 ஆம் ஆண்டு முதல் எங்கள் அரசாங்கத்தைப் பற்றி மக்கள் எதைப் பாராட்டினார்கள் என்பதை பலரும் எடுத்துக்காட்டுகிறார்கள். இத்தகைய பாசத்தைப் பெறுவது எப்போதும் நெகிழ்ச்சியாக இருக்கிறது, மக்களுக்காக கடினமாக உழைக்க இது எனக்கு கூடுதல் பலத்தை அளிக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.



 
மே 30 முதல் ஒரு மாதத்திற்கு நாடு முழுவதும் வெகுஜன மக்களைச் சென்றடையும் திட்டத்தைத் தொடங்க பாஜக முடிவு செய்துள்ளது என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மே 30 முதல் ஜூன் 30 வரை நாடு முழுவதும் சுமார் 50 பேரணிகளை நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது, அதில் பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்கி அரை டஜன் பேரணிகளில் உரையாற்றுவார்.


ஏறக்குறைய ஒரு வருடத்தில் எதிர்வர உள்ள மக்களவைத் தேர்தலுக்கான பாஜகவின் தயாரிப்புகளுக்கும் இந்த பிரச்சாரம் உத்வேகம் அளிக்கும். மே 31-ம் தேதி ராஜஸ்தானின் அஜ்மீரில் பிரதமர் மோடியின் மெகா பேரணி மூலம் இந்த பிரச்சாரம் தொடங்கப்படும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.


பாஜ தேசிய தலைவர் ஜேபி நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் பலர், இந்த மெகா பிரச்சாரத்தில் பங்கேற்பார்கள் என்று தெரிகிறது. முதல் முறையாக பிரதமராக 2014 மே 26 அன்று பதவியேற்ற நரேந்திர மோடி, இரண்டாவது முறையாக மே 30, 2019 அன்று பதவியேற்றார்.


மேலும் படிக்க | வளர்ச்சி அடைந்த பாரதம்@2047... பிரதமர் மோடி தலைமையிலான கூட்டத்தை புறக்கணித்த 7 முதல்வர்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ