Video: பிரம்மாண்டமான புதிய நாடாளுமன்றம்... வீடியோவை பகிர்ந்த பிரதமர் மோடி!

பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை புதிய பாராளுமன்றத்தின் வீடியோவை தனது டிவிட்டர் கணக்கில் வெளியிட்டார். இந்த வீடியோவில், புதிய பாராளுமன்ற கட்டிடத்தின் பிரமாண்டமான வெளிப்புறம் மற்றும் உட்புறம் காட்டப்பட்டுள்ளது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 26, 2023, 08:51 PM IST
  • நாடாளுமன்றத்தின் புதிய கட்டிட திறப்பு விழா நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணியளவில் தொடங்கும்
  • காலை 9 மணியளவில் மக்களவை சபாநாயகர் இருக்கைக்கு அருகில் செங்கோல் நிறுவப்படும்.
  • இந்திய நாடாளுமன்றத்தின் புதிய கட்டிடம் ஒவ்வொரு இந்தியரையும் பெருமைப்படுத்தும்.
Video: பிரம்மாண்டமான புதிய நாடாளுமன்றம்... வீடியோவை பகிர்ந்த பிரதமர் மோடி!  title=

புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா: புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (மே 28) திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் 25 கட்சிகள் பங்கேற்கும் நிலையில் காங்கிரஸ் உள்ளிட்ட 25 கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. இதற்கிடையில், பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை புதிய பாராளுமன்றத்தின் வீடியோவை தனது டிவிட்டர் கணக்கில் வெளியிட்டார். இந்த வீடியோவில், புதிய பாராளுமன்ற கட்டிடத்தின் பிரமாண்டமான வெளிப்புறம் மற்றும் உட்புறம் காட்டப்பட்டுள்ளது. புதிய நாடாளுமன்றத்தில் மக்களவை - மாநிலங்கள் அவை எப்படி இருக்கும் என்பதும் காட்டப்பட்டுள்ளது.

இந்த வீடியோவின் தலைப்பில், இந்திய நாடாளுமன்றத்தின் புதிய கட்டிடம் ஒவ்வொரு இந்தியரையும் பெருமைப்படுத்தும் என்று பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார். இந்த வரலாற்று கட்டிடத்தின் ஒரு பார்வை இந்த வீடியோவில் தெளிவாக தெரியும் எனக் கூறிய அவர், அனைவரிடமும் எனக்கு ஒரு சிறப்பு வேண்டுகோள் வைத்துள்ளார். இந்த வீடியோவை உங்கள் குரல் மூலம் உங்கள் எண்ணங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.  #Myparliamentmy pride என்ற ஹேஷ்டேக்கை கண்டிப்பாக பயன்படுத்தவும் என குறிப்பிட்டுள்ளார். சென்டிரல் விஸ்டா திட்டத்தின் ஒரு அங்கமாக கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கான அடிக்கலை நாட்டி, கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பிரதமர் மோடி தொடக்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடி பகிர்ந்து கொண்ட வீடியோ:

நாடாளுமன்றத்தின் புதிய கட்டிட திறப்பு விழா நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணியளவில் தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. வேத முறைப்படி சிறப்பு வழிபாட்டுடன் நிகழ்ச்சி தொடங்கும். இந்த சிறப்பு பூஜை சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெறும் என தெரிகிறது. இந்த சிறப்பு வழிபாடு நிகழ்ச்சியில், பிரதமர் மோடியை தவிர, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மாநிலங்கள் அவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் ஆகியோரும் கலந்து கொள்ள வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. பூஜை மற்றும் வேத முழக்கத்தின் போது, ​​தமிழகத்தின் பல்வேறு மடங்களைச் சேர்ந்த 20 ஆன்மீக தலைவர்கள் மற்றும் சிறப்பு அர்ச்சகர்கள் புனித செங்கோலை பிரதமர் நரேந்திர மோடியிடம் ஒப்படைப்பார்கள். இது காலை 9 மணியளவில் மக்களவை சபாநாயகர் இருக்கைக்கு அருகில் நிறுவப்படும்.

இதன் பின்னர், நாடாளுமன்ற திறப்பு விழாவின் முக்கிய நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைக்கப்பட்ட சிறப்பு விருந்தினர்கள் மற்றும் எம்.பி.க்கள் புதிய நாடாளுமன்ற வளாகத்திற்குள் கட்டப்பட்டுள்ள மக்களவையின் அறையை அடைவார்கள். இந்த விழா மதியம் 12 மணிக்கு மேல் தான் தொடங்கும் என தெரிகிறது.

முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, முன்னாள் பிரதமர் தேவகவுடா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தேசிய தலைவரும், மாநிலங்கள் அவை எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜுன் கார்கே, மக்களவை முன்னாள் சபாநாயகர்கள் உள்ளிட்டோர் முக்கிய நிகழ்வில் கலந்து கொள்வார்கள். புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா, தலைவர்களுக்கும் சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியின் போது இந்த கட்டம திறப்பு விழா தேசிய கீதத்துடன் தொடங்கும், அதன் பிறகு ஒரு சிறு ஆவணப்படமும் காண்பிக்கப்படும். மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, நாடாளுமன்ற கட்டிட வளாகத்தின் பாதுகாவலராக இருப்பதால், நிகழ்ச்சியில் உரையாற்றுவார் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் உரையுடன் திறப்பு விழா நிகழ்ச்சி முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் படிக்க | ₹75 நினைவு நாணயம் வெளியீடு! நாடாளுமன்றத்தின் புதிய கட்டட திறப்புவிழா

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News