ஷீரடியில் நடைபெற்ற விழாவில், பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின்கீழ் பயன்பெற்ற பயனாளிகளுக்கு பிரதமர் மோடி வீட்டு சாவிகளை ஒப்படைத்தார்...! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மகாராஷ்டிரா மாநிலத்தில் அமைந்துள்ளது உலக புகழ் பெற்ற ஷீரடி சாய்பாபா கோவிலில் விஜயதசமி தினத்தன்று சாய்பாபாவின் மகா சமாதி தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சாய்பாபா மகா சமாதி நிறைவு தினமான இன்று சிறப்பு பூஜைகள், தரிசன ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.


இந்நிலையில், இன்று, பிரதமர் மோடி ஷீரடி சாய்பாபா கோயிலில் வழிபாடு நடத்தினார். இதையடுத்து, பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின்கீழ் பயனாளிகளுக்கு வீட்டு சாவிகளை ஒப்படைக்கும் விழா நடைபெற்றது. விழாவில் 10 பயனாளிகளுக்கு வீட்டு சாவிகளை பிரதமர் மோடி ஒப்படைத்தார். 



அதேசமயம் அமராவதி, நாக்பூர், நந்தூர்பர், தானே, சோலாப்பூர் உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற விழாவிலும் பயனாளிகளுக்கு வீட்டு சாவிகள் ஒப்படைக்கப்பட்டன. அவர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் மோடி உரையாடினார்.


தானேவைச் சேர்ந்த பெண்களிடம் மோடி பேசும்போது, ‘உங்கள் குழந்தைகளை படிக்க வைப்பது, நாட்டில் வறுமைக்கு எதிரான போராட்டத்திற்கு மிகப்பெரிய வலுசேர்க்கும்’ என்றார். நிகழ்ச்சியில் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் பலர் பங்கேற்றனர்.