கர்நாடகா தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு பிரதமர் மோடி வாழ்த்து!
காங்கிரஸ் கட்சி மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் ர்ன பிரதமர் மோடி தனது வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.
பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவையில் தனித்து ஆட்சி அமைக்க தேவையான அறுதி பெரும்பான்மை இடங்களை காங்கிரஸ் கட்சி வென்றது. மொத்தமுள்ள 224 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களான 114 இடங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளதோடு, மேலும், 22 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
கர்நாடக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். கட்சியின் பிரச்சாரத்தில் கடுமையாக உழைத்த பாஜக தொண்டர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்தார். இன்று தெற்கில் பாஜக தனது ஒரே கோட்டையை இழந்தது. காங்கிரஸ் 130 இடங்களில் முன்னிலை என தகவல் வந்த சிறிது நேரத்திலேயே கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தோல்வியை ஒப்புக்கொண்டார். பாஜக 60க்கும் மேற்பட்ட இடங்களிலும், முன்னாள் முதல்வர் குமாரசாமியின் மதச்சார்பற்ற ஜனதா தளம் 20 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.
"கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு வாழ்த்துக்கள். மக்களின் விருப்பங்களை நிறைவேற்ற அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்" என்று பிரதமர் மோடி இன்று ட்வீட் செய்துள்ளார்.
மேலும் "கர்நாடகா தேர்தலில் எங்களுக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நான் நன்றி கூறுகிறேன். பாஜக தொண்டர்களின் கடின உழைப்பை நான் பாராட்டுகிறேன். வரும் காலங்களில் கர்நாடகாவில் இன்னும் உற்சாகத்துடன் சேவை செய்வோம்" என்று பிரதமர் ட்வீட் செய்துள்ளார்.
;
கர்நாடக தேர்தலுக்காக பாஜக கட்சி சார்பில் பிரதமர் மோடி தீவிர பிரசாரம் செய்தார். மாநிலத்தில் ஆட்சியை தக்கவைக்க பிரதமர் மோடியின் பிரச்சாரங்கள் தங்களுக்கு தேவையான ஊக்கத்தை அளிக்கும் என்று மாநிலத்தில் உள்ள கட்சித் தலைவர்கள் நம்பிக்கை கொண்டிருந்தனர்.
மேலும் படிக்க | Karnataka CM Contest: சித்தராமையாவே முதலமைச்சர்! உரக்க ஒலிக்கத் தொடங்கும் குரல்கள்
முன்னதாக, கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர்கள், தொண்டர்கள் என அனைவரும் கடுமையாக முயற்சி செய்தும் எங்களால் போதிய எண்ணிக்கையில் வெற்றி பெற முடியவில்லை என்று தெரிவித்துள்ளார். தேர்தல் முடிவுகள் முழுமையாக வந்த பிறகு முடிவுகள் குறித்து விரிவான ஆய்வு நடத்தப்படும். இந்த முடிவினை வரும் மக்களவைத் தேர்தலுக்கான பாடமாக ஏற்றுக் கொள்கிறோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை விட கூடுதலான இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருப்பதால், வேறு கட்சிகளில் ஆதரவின்றி ஆட்சி அமைக்கும் நிலை உருவாகியுள்ளதால், காங்கிரஸ் கட்சிக்கு இது பெரும் உத்வேககத்தை கொடுத்துள்ளது.கர்நாடகாவில் 224 தொகுதிகளுக்கு மே 10ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. 73.19 சதவீத வாக்காளர்கள் வாக்களித்தனர்.
மேலும் படிக்க | CM Of Karnataka: கர்நாடகாவின் புதிய முதலமைச்சர் யார்? காங்கிரஸின் புதிய ஃபார்முலா
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ