கர்நாடகாவை ‘கை’ப்பற்றும் காங்கிரஸ்... வெற்றி பெற உதவிய உத்திகள் இவை தான்!

காங்கிரஸின் இந்த சிறப்பான வெற்றிக்கு, எந்தெந்த விவகாரங்கள் அதிசயங்களைச் செய்தன; கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றிக்கனியை பறிக்க காரணமாக இருந்தவை எவை என்பதை அறிந்து கொள்ளலாம்

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 13, 2023, 02:25 PM IST
  • காங்கிரஸ் அதிக தொகுதிகளில் முன்னிலையில் இருந்து வருவதால் அக்கட்சியின் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
  • பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை விட கூடுதலான இடங்களில் காங்கிரஸ் முன்னிலை
  • காங்கிரஸ் கட்சிக்கு இது பெரும் உத்வேககத்தை கொடுத்துள்ளது.
கர்நாடகாவை ‘கை’ப்பற்றும் காங்கிரஸ்... வெற்றி பெற உதவிய உத்திகள் இவை தான்! title=

கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி விறுவிறுப்பாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மொத்தமுள்ள 224 இடங்களில் ஆட்சியமைக்க 113 தொகுதிகள் தேவை என்ற நிலையில், காங்கிரஸ் 130க்கும் அதிகமான தொகுதிகளில் முன்னிலையில் இருந்து வருகிறது. ஆளுங்கட்சியான பாஜக 63 தொகுதிகளில் முன்னிலையில் இருந்து வருகிறது. காங்கிரஸ் அதிக தொகுதிகளில் முன்னிலையில் இருந்து வருவதால் அக்கட்சியின் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர். பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை விட கூடுதலான இடங்களில் காங்கிரஸ் முன்னிலையில் இருப்பதால் வேறு கட்சிகளில் ஆதரவின்றி ஆட்சி அமைக்கும் நிலை உருவாகியுள்ளதல், காங்கிரஸ் கட்சிக்கு இது பெரும் உத்வேககத்தை கொடுத்துள்ளது.

காங்கிரஸின் இந்த சிறப்பான வெற்றிக்கு, எந்தெந்த விவகாரங்கள் அதிசயங்களைச் செய்தன; கர்நாடகாவில் காங்கிர்ஸ் வெற்றிக்கனியை பறிக்க காரணமாக இருந்தவை என்பதை அறிந்து கொள்ளலாம்:

ஊழல் விவகாரம்

கர்நாடகாவில் ஊழல் பிரச்னையை எழுப்பிய காங்கிரஸ், ஆரம்பம் முதலே ஊழல் விவகாரத்தில் பாஜக அரசை தொடர்ந்து தாக்கி வருகிறது. காங்கிரஸ் கட்சி பாஜகவுக்கு எதிராக 40% கமிஷன் அரசு என்ற முழக்கத்தை முன்னெடுத்தது. இந்த முழக்கமும் வியூகமும்தான் கர்நாடகாவில் காங்கிரஸ் எளிதாக பாஜகவை வீழ்த்தி ஆட்சியை கைப்பற்ற காரணம் என கூறப்படுகிறது. காங்கிரஸ். தேர்தல் பிரசாரத்தின் போது, ​​சுவரொட்டிகளிலும், பேரணிகளிலும், இந்த பிரச்னை குறித்து அதிகம் பேசியது. பெலகாவியில் ஒப்பந்ததாரர் ஒருவர் பாஜக அமைச்சர் மீது 40 சதவீதம் கமிஷன் கேட்டதாக குற்றம் சாட்டி தற்கொலை செய்து கொண்டார். ஒப்பந்ததாரர் சங்கம் மாநில அரசைக் கடுமையாக குற்றம் சாட்டியது என்பது குறிப்பிடத்தக்கது. 

அமுல் vs நந்தினி

 கர்நாடகா சட்டசபை தேர்தலில் அமுல் vs நந்தினி என்ற பிரச்சினை ஆதிக்கம் செலுத்தியது. இந்த ஆண்டு ஏப்ரல் 5 ஆம் தேதி, குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு (GCMMF) கர்நாடகாவில் அமுல் தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவதாக அறிவித்தது. இந்த அறிவிப்பிற்குப் பிறகு, இந்த விவாரம் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்த தொடங்கியது. இதனை பல தலைவர்கள் மட்டுமல்லாது, கர்நாடக மக்கள் எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கினர்.

மேலும் படிக்க | Karnataka CM Contest: சித்தராமையாவே முதலமைச்சர்! உரக்க ஒலிக்கத் தொடங்கும் குரல்கள்

இலவச திட்டங்கள்

காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் பல இலவச அறிவிப்புகளை வெளியிட்டது. இது காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக மாறி உள்ளது. இலவச மின்சாரம் வழங்கும் கிருஹ ஜோதி திட்டம் மூலம் ஒவ்வொரு வீட்டுக்கும் மாதம் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் எனவும், கிருஹ லக்ஷ்மி திதிட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குடும்பத் தலைவிக்கும் மாதம் 2000 ரூபாய் வழங்கப்படும் எனவும் அறிவித்தது. அதோடு, யுவ நிதி என்னும் திட்டத்தின் கீழ் வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் 3,000 ரூபாயும், வேலையில்லாத டிப்ளமோ பட்டம் வைத்திருப்பவர்களுக்கு மாதம் ரூபாய் வழங்கப்படும் எனவும் அறிவித்தது. அன்ன பாக்யா என்னும் திட்டத்தின் கீழ் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு ஒரு நபருக்கு மாதம் 10 கிலோ அரிசி இலவசமாக அளிக்கப்படும் எனவும் வாக்குறுதி அளித்தது. 

முதலமைச்சர் பதவி யாருக்கு..!!

கர்நாடகாவில் பெரும்பான்மையை எட்டியதையடுத்து  அடுத்ததாக யார் முதல்வர் என்ற விவகாரமும் சூடு பிடித்துள்ளது. டிகே சிவகுமார் மற்றும் சித்தாராமையா இருவரையும் திருப்தி படுத்தும் வகையில், கர்நாடகாவில்  இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருவர் என இரண்டு முதல்வர்களை உருவாக்குவதற்கான சூத்திரத்தை காங்கிரஸ் தயாரித்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது முதல் இரண்டரை ஆண்டுகளுக்கு சித்தராமையா முதலமைச்சராக பதவியேற்பார் என்றும், அதன்பிறகு இரண்டரை ஆண்டுகள் டிகே சிவக்குமார் முதலமைச்சராக இருப்பார் என்றும் கூறப்படுகிறது.

கர்நாடகாவில் 224 தொகுதிகளுக்கு மே 10ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.  73.19 சதவீத வாக்காளர்கள் வாக்களித்தனர். பகல் 1.30 மணி நிலவரப்படி காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. பாஜக 64 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 22 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகின்றன. இதற்கிடையில், பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர்கள், தொண்டர்கள் என அனைவரும் கடுமையாக முயற்சி செய்தும் எங்களால் போதிய எண்ணிக்கையில் வெற்றி பெற முடியவில்லை என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். தேர்தல் முடிவுகள் முழுமையாக வந்த பிறகு முடிவுகள் குறித்து விரிவான ஆய்வு நடத்தப்படும். இந்த முடிவினை வரும் மக்களவைத் தேர்தலுக்கான பாடமாக ஏற்றுக் கொள்கிறோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | CM Of Karnataka: கர்நாடகாவின் புதிய முதலமைச்சர் யார்? காங்கிரஸின் புதிய ஃபார்முலா

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News