பூர்வாஞ்சல் நெடுஞ்சாலை: போர் விமானத்தில் வந்திறங்கி திறந்து வைத்தார் பிரதமர் மோடி..!!
பூர்வாஞ்சல் நெடுஞ்சாலையில், அவசர காலத்தில் இந்திய விமானப்படையின் போர் விமானங்கள் தர இறங்குவதற்கும், புறப்படுவதற்கும் ஏதுவாக 3.2 கி.மீ. தூரம் அளவிற்கான நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது.
பூர்வாஞ்சல் நெடுஞ்சாலையில், அவசர காலத்தில் இந்திய விமானப்படையின் போர் விமானங்கள் தர இறங்குவதற்கும், புறப்படுவதற்கும் ஏதுவாக 3.2 கி.மீ. தூரம் அளவிற்கான நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், வாகன போக்குவரத்திற்கான இந்திய தேசிய நெடுஞ்சாலைகள், இனி பேரிடர் காலங்களில் அல்லது அவசர நிலை தேவைகளுக்காக நேரிடையாக விமானங்களும் தரையிறங்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்ற செய்தி உலகிற்கு வழ்ங்கப்பட்டுள்ளது. இதை அடுத்து, உலக தரம் வாய்ந்த தார் சாலைகளை கொண்ட நாடாக இந்தியா மிக வேகமாக முன்னேறி வருகிறது. இந்தியாவின் உள்கட்டமைப்பு வசதிகள் எந்த அளவிற்கு முன்னேற்றம் கண்டு வருகிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.
ALSO READ | Cryptocurrency: குளிர்கால கூட்டத் தொரில் கிரிப்டோகரன்சி குறித்த முக்கிய முடிவு?
உத்தர பிரதேசத்தை இணைக்கும் பூர்வாஞ்சல் எக்ஸ்பிரஸ்வே சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி, பூர்வாஞ்சல் நெடுஞ்சாலைக்கு அடிக்கல் நாட்டிய போது, இந்த சாலையில் போர் விமானத்தில் வந்திறங்குவேன் என நிணைத்து கூட பார்த்தது இல்லை என்றும், இந்தப் பகுதியில் உள்ள மக்கள் பிரிட்டிஷாருக்கு சவால் விடுத்து வெற்றி கண்டுள்ளனர் என பிரதமர் மோடி (PM Narendra Modi) குறிப்பிட்டார்.
போர் காலத்தை கருத்தில் கொண்டு, நாட்டின் பல்வேறு பகுதிகளின் நெடுஞ்சாலைகளில் போர் விமானங்கள் தரையிறங்கும் வசதி ஏற்படுத்தப்பட்டு வருகிறது. உத்தர பிரதேசத்தின் கிழக்கு மாவட்டங்களை இணைக்கும் வகையில் ரூ.22,500 கோடி செலவில் 340 கி.மீ. தொலைவுக்கு பூர்வாஞ்சல் எக்ஸ்பிரஸ்வே அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | RBI வெளியிடும் ₹75, ₹100, ₹125 நினைவு நாணயங்கள்; பெறுவது எப்படி..!!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR