Cryptocurrency: குளிர்கால கூட்டத் தொரில் கிரிப்டோகரன்சி குறித்த முக்கிய முடிவு?

கிரிப்டோகரன்சி குறித்த இந்திய அரசின் நிலைப்பாடு குறித்த ஆலோசனை கூட்டத்தில் கிரிப்டோகரன்சி தொடர்பான அனைத்து பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 16, 2021, 03:23 PM IST
  • கிரிப்டோகரன்சிகள் பற்றிய விரிவான விவாதம்.
  • நிதி அமைச்சகத்தின் நிலைக்குழு நீண்ட நேரம் ஆலோசனை.
  • கிரிப்டோ கரன்சி குறித்து அதிக விளம்பரங்கள் வருவது குறித்து கூட்டத்தில் கலந்து கொண்ட சில எம்.பி.க்கள் கவலை
Cryptocurrency: குளிர்கால கூட்டத் தொரில் கிரிப்டோகரன்சி குறித்த முக்கிய முடிவு? title=

புதுடெல்லி: உலகில் உள்ள டிரில்லியன் கணக்கில் நடைபெறும் கிரிப்டோகரன்சி வணிகம் இந்தியாவில் அனுமதிக்கப்படுமா என்ற கேள்வி தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், கிரிப்டோகரன்சி (Cryptocurrency) தொடர்பாக நிதியமைச்சகத்தின் நிலைக்குழுவின் முக்கிய கூட்டம் நடந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

கிரிப்டோகரன்சி தொடர்பான இந்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள பெரும்பாலான உறுப்பினர்கள் கிரிப்டோகரன்சியை தடை செய்வதற்கு ஆதரவாக இல்லை என்றாலும், பெரும்பாலான உறுப்பினர்கள் அதை ஒழுங்குபடுத்துவது தொடர்பான நடவடிக்கைக்கு ஆதரவாக உள்ளனர். அதே நேரத்தில், கிரிப்டோ கரன்சியின் குறித்து அதிக விளம்பரங்கள் வருவது குறித்து கூட்டத்தில் கலந்து கொண்ட சில எம்.பி.க்கள் கவலை தெரிவித்ததாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

கிரிப்டோகரன்சிகளுக்கான (Cryptocurrency) நாடாளுமன்றக் குழுவின் முதல் கூட்டம் நேற்று நடந்தது.  கிரிப்டோகரன்சிகளை முழுமையாக தடை செய்ய முடியாது என்பது அந்த கூட்டத்தில் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. எனவே அதை முறையாக ஒழுங்குபடுத்த வேண்டும் என்று பரவலாக ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.

ALSO READ | RBI வெளியிடும் ₹75, ₹100, ₹125 நினைவு நாணயங்கள்; பெறுவது எப்படி..!!!

இந்த கூட்டத்தில் கிரிப்டோகரன்சி தொடர்பான அனைத்து பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதலீட்டாளர்களின் நலன்களைப் பாதுகாப்பது குறித்த கவலைகளை எழுப்பியதுடன், கிரிப்டோ கரன்சிகளை ஊக்குவிக்கும் செய்தித்தாள்களில், டிவியில் வெளியாகும் விளம்பரங்கள் குறித்தும் கேள்வி எழுப்பினர்.

கிரிப்டோகரன்ஸிகளில் முதலீடு செய்வதற்கு பல்வேறு வகையான கவர்ச்சியான விளம்பரங்கள் காட்டப்படும் நிலையில், கடந்த சனிக்கிழமையன்று, பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi) கிரிப்டோகரன்சி தொடர்பாக பல அமைச்சகங்களின் அதிகாரிகளுடன் நீண்ட நேரம் கூட்டம் நடத்தினார். 

கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்வதற்கான கவர்ச்சிகரமான விளம்பரங்கள், கிரிப்டோவில் முதலீடு செய்வதன் மூலம் மக்கள் அதிக அளவில் லாபம் ஈட்டலாம் என கூறப்படுகின்றன. கவர்ச்சிகரமான 
இந்த விளம்பரங்கள் காரணமாக 10 கோடி இந்தியர்கள் இதில் முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் இருந்து ரூ.6 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றன.

கிரிப்டோகரன்சிகளில் முதலீடு கட்டுப்படுத்தப்படவில்லை  என்றால், முதலீடுகள் மீது இந்திய அரசாங்கத்திற்கு கட்டுப்பாடு ஏதும் இருக்காது என்பதோடு, போதைப்பொருள் வணிகம், பயங்கரவாத நிதி ஆகியவற்றுக்கான நிதியாக இதை பயன்படுத்தப்படும் ஆபத்தும் உள்ளது. இதனால், பெரிய அளவில் பணமோசடி ஏற்படும் அபாயம் உள்ளது.

ALSO READ | Cryptocurrency: கிரிப்டோகரன்ஸி குறித்து பிரதமர் மோடி முக்கிய கூட்டம்

கிரிப்டோகரன்சிகள் குறித்து இந்திய அரசு தொடர்ந்து ஆலோசனை நடத்தி வரும் நிலையில், குளிர்கால கூட்டத்தொடரில் சில முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. கிரிப்டோ நாணயத்தின் வணிகம் சுமார் 12 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள். இதில், இதேரியம் (Ethereum) என்ற  கிரிப்டோகரன்சி $550 பில்லியன் என்ற அளவிலும், டாட்ஜ்காயின் (Dodgecoin) $34 பில்லியன் என்ற அளவிலும் வர்த்தகம் செய்கின்றன.

உலகின் பல நாடுகளில் வர்த்தகம் நடைபெறும் நிலையில், இந்தியாவிலும் இதன் மீதான முதலீடு அதிகரித்துள்ளது. எனவே இப்போது கிரிப்டோ நாணயம் இந்தியாவிலும் கட்டுப்படுத்தப்பட வேண்டும். அதே நேரத்தில், பொருளாதாரத்தில் வல்லுநர்கள் இது குறித்து கூறுகையில், கிரிப்டோ மீதான் முதலீடுகள் கட்டுப்படுத்தப்படாத வரை, அதில் பணத்தை முதலீடு செய்யக்கூடாது என்று ஆலோசனை வழங்கியுள்ளனர்.

ALSO READ | திணறும் டெல்லி: அதிகரிக்கும் மாசை கட்டுப்படுத்த தீவிர முயற்சியில் அரசு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News