உலக அரங்கில் இந்தியாவின் முன்னுரிமைகளை முன்வைக்க ஜி 20 உச்சி மாநாட்டிற்காக பிரதமர் மோடி ஜப்பானின் ஒசாகாவில் இறங்குகிறார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜப்பானின் ஒசாகா நகரில் 28,29 ஆகிய இரண்டு நாட்களுக்கு நடைபெறும் ஜி 20 நாடுகளின் உச்சிமாநாட்டில் பங்கேற்க நேற்றிரவு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டார். இன்று அதிகாலையில் ஒசாகா சென்ற மோடிக்கு விமானநிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. ஓட்டலுக்கு சென்ற மோடியை வரவேற்க ஏராளமான இந்தியர்கள் திரண்டிருந்தனர். அவர்கள் பூங்கொடுத்து கொடுத்தும், கைகுலுக்கியும் வரவேற்றனர்.


ஜி20 மாநாட்டில் தீவிரவாதமும் சுற்றுச்சூழலும் முக்கியப் பிரச்சினைகளாக விவாதிக்கப்பட உள்ளன. கடந்த 5 ஆண்டுகளில் மோடியின் ஆட்சியில் இந்தியா அடைந்த வளர்ச்சியை குறித்து விவாதிக்கவும் இந்த மாநாட்டில் வாய்ப்புள்ளது.




ஒசாகாவுக்குப் புறப்படும் முன்பு மோடி வெளியிட்ட செய்திக் குறிப்பில், உலக நாடுகள் சந்தித்து வரும் மிகப்பெரிய சவால்களை குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்க வாய்ப்பு கிடைத்திருப்பதாக தெரிவித்துள்ளார். பெண்களின் தொழில் வளர்ச்சி, டிஜிட்டல் மயமாக்கல், செயற்கை திறன்கள், வளர்ச்சியை அடையக் கூடிய திட்டங்கள், ஆகியவற்றுடன் உலகிற்கே பெரும் சவாலாக விளங்கும் தீவிரவாதம் சுற்றுச்சூழல் போன்ற மிகப்பெரிய பிரச்சினைகளை இந்த மாநாட்டில் விவாதிக்க இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.


மாநாட்டின் இடையே நாளை டிரம்ப்பை சந்திக்கும் மோடி, தீவிரவாத தடுப்பு மற்றும் பல்வேறு முக்கியப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க உள்ளார். ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, பிரான்ஸ் அதிபர் இமானுவல் மாக்ரன், உள்ளிட்ட பத்து நாடுகளின் தலைவர்களுடனும் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.