பீகாருக்குப் பிறகு, உத்தரகண்ட் மாநிலத்திற்கு பிரதமர் மோடியின் பரிசு, இன்று 6 பெரிய திட்டங்களைத் தொடங்கவுள்ளது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பீகாரிற்குப் பிறகு, பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi) தீபாவளிக்கு முன்பு உத்தரகண்ட் மக்களுக்கு ஒரு பெரிய பரிசை வழங்க உள்ளார். பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 29) நமாமி கங்கே மிஷனின் (Namami Gange Mission) கீழ் 6 மெகா திட்டங்களை திறந்து வைக்க உள்ளார். இவற்றில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களும் அடங்கும். நிகழ்ச்சியின் போது, ​​கங்கைக்கு (Ganga Avalokan) அர்ப்பணிக்கப்பட்ட ஒரு அருங்காட்சியகத்தையும் பிரதமர் மோடி திறந்து வைப்பார். இந்த அருங்காட்சியகம் ஹரித்வார் என்ற கங்கைக் கரையில் உள்ள சாந்தினி காட்டில் அமைந்துள்ளது.


இது தொடர்பாக பிரதமர் மோடி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தகவல்களை வழங்கியுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, 'இந்த திட்டங்களின் ஆரம்பம் நமாமி கங்கே மிஷனுக்கு (Namami Gange) ஒரு மைல்கல்லாக இருக்கும். கங்கையை மாநிலத்தில் மாசுபாட்டிலிருந்து விடுவிக்கும் 30 திட்டங்களும் இப்போது நிறைவடைந்துள்ளன என்பது பெருமைக்குரிய விஷயம் என்று அவர் கூறினார்.



ALSO READ | Facebook-ல் அதிக நேரம் செலவிடுவது தவறான நடத்தைக்கு வித்திடும் - ஆய்வில் பகீர் தகவல்!


இதை தொடர்ந்து அவர் பதிவிட்டுள்ள மற்றொரு ட்விட்டர் பதிவில், 'தேவபூமி உத்தரகண்டிற்கு நாளை மிக முக்கியமான நாள், தொடர்ந்து வளர்ச்சியின் பாதையில் நகர்கிறது. ஹரித்வார், ரிஷிகேஷ், பத்ரிநாத் உள்ளிட்ட பல நகரங்களின் ஆறு பெரிய திட்டங்கள் நமமி கங்கே மிஷனின் கீழ் காலை 11 மணிக்கு வீடியோ கான்பரன்சிங் மூலம் திறக்கப்படும்' என குறிப்பிட்டுள்ளார். 


உத்தரகண்ட் மாநிலத்தின் கழிவுநீரை சுத்திகரிக்கும் கூடம்


உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வார் ஜக்ஜித்பூரில் ரூ.230.32 கோடி செலவில் ஒரு நாளைக்கு 26 மில்லியன் லிட்டர்கள் (MLD) கழிவுநீரை சுத்திகரிக்கும் கூடம். 68 MLD ஜெக்தீப்பூர் திட்டம், பொதுத்துறை, தனியார் கூட்டு முயற்சியில் மேற்கொள்ளப்பட்ட முதலாவது கழிவுநீர்த் திட்டத்தின் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் அமைந்துள்ளது.


ரிஷிகேசில், லக்காத்கட்டில் ஒரு நாளைக்கு 26 மில்லியன் லிட்டர்கள் கழிவுநீரை சுத்திகரிக்கும் கூடம் தொடங்கப்படும்.


ஹரித்துவார் – ரிஷிகேஷ் மண்டலத்தில் 80 சதவீதக் கழிவு நீர் கங்கை நதியில் விடப்படுகிறது. எனவே, இந்த கழிவுநீர் சுத்திகரிப்புக் கூடங்கள் தொடங்கப்படுவது, கங்கை நதியைத் தூய்மையாக வைத்திருப்பதில் முக்கியமான பங்காற்றும்


முனி கி ரெட்டி நகர் , சந்திரகேஷ்வர் நகரில் அமையவுள்ள ஒரு நாளைக்கு 7.5 மில்லியன் லிட்டர்கள் கழிவுநீரை சுத்திகரிக்கும் கூடத்தை நாட்டின் முதலாவது நான்கு அடுக்கு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையமாகும். அங்கு நிலம் கிடைப்பதில் இருந்த தட்டுப்பாடு, ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த கழிவுநீர் சுத்திகரிப்புக் கூடம் 900 சதுர மீட்டர் பரப்பிற்கும் குறைவான இடத்தில் கட்டப்பட்டுள்ளது. பொதுவாக இந்தத் திறன் கொண்ட ஒரு கழிவுநீரை சுத்திகரிக்கும் கூடத்தை அமைப்பதற்குத் தேவைப்படும் நிலத்தில் இது 30 சதவீதம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.


சொர்பானியில் ஒரு நாளக்கு 5 மில்லியன் லிட்டர்கள் கழிவுநீரை சுத்திகரிக்கும் கூடத்தை, பத்ரிநாத்தில் 1 மில்லியன் லிட்டர்கள், 0.01 மில்லியன் லிட்டர்கள் திறன் கொண்ட கழிவுநீரை சுத்திகரிக்கும் இரு கூடங்களையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார்.


ஹரித்வார், ரிஷிகேஷ், முனி கி ரெட்டி மற்றும் பத்ரிநாத் ஆகிய இடங்களில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் திறக்கப்படும் என்று தேசிய தூய்மையான கங்கா மிஷன் இயக்குநர் ஜெனரல் ராஜீவ் ரஞ்சன் மிஸ்ரா தெரிவித்தார். உத்தரகண்ட் மாநிலத்தில் கட்டப்பட்ட புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அனைத்தும் அதிநவீனவை. இவை மூலம் திடக்கழிவுகள் உரமாக மாற்றப்படும்.