ஜூலை 23 ஒலிம்பிக் விளையாட்டு  நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டில் நடப்பதாக தொட்டமிட்டிருந்த  ஒலிம்பிக் போட்டிகள் கொரோனா தொற்றுநோய் பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொரோனா பரவலை கருத்தில் கொண்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் பார்வையாளர்கள் இல்லாமல் நடைபெறும்.


ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வருகிற 23-ந்தேதி முதல் ஆகஸ்ட் 8-ந்தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்பதற்காக இந்தியாவைச் சேர்ந்த 120க்கும் அதிகமான வீரர்கள் தகுதிப் பெற்றுள்ளனர். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 11 வீரர்களும் அடங்குவர். 


ALSO READ | Olympics: நாகநாதன் பாண்டி - கட்டுமானத் தொழிலாளர் முதல் ஒலிம்பிக் வீரர் வரை…


இந்நிலையில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுடன் பிரதமர் மோடி 13-ந்தேதி கலந்துரையாடுகிறார். அன்று மாலை 5 மணிக்கு வீடியோ கான்பரென்ஸிங் மூலம் நடைபெறும் கலந்துரையாடலில் வீரர்கள்- வீராங்கனைகளுடன் மோடி பேசுகிறார். ஒலிம்பிக்கில் பதக்கங்களை வெல்ல வீரர்கள் – வீராங்கனைகளுக்கு வாழ்த்தும், ஆதரவும் தெரிவிப்பதோடு, அவர்களுக்கு ஊக்கமும் வழங்குவார்


டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் நெருங்கி வரும் நிலையில் வீரர்கள், அதிகாரிகள் என பலரும் டோக்கியோவிற்கு வந்துக் கொண்டிருக்கின்றனர். பாதுகாப்பு விதிகள் கடுமையாக்கப்பட்டிருக்கும் நிலையில், முழுமையான தடுப்பூசி பாதுகாப்பு பெற்றவர்கள் கூட கொரோனா பரிசோதனை செய்து, கொரோனா பாதிப்பு இல்லை என்று தெரிந்த பிறகு விமான நிலையத்தை விட்டு வெளியேற முடியும். 


ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் நடைபெறும் ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 8 வரையிலான காலகட்டத்தில் டோக்கியோவில் வைரஸ் எமர்ஜென்ஸி அறிவிக்கப்பட்டுள்ளது. உலகில் இப்படியொரு அவசரநிலை அறிவிக்கப்படுவது இதுவே முதல்முறையாக இருக்கலாம். கொரோனா வைரஸின் பரவல் மிக முக்கியமான நிகழ்வுகளைக் கூட மாற்றிவிட்டது.


Also Read | COVID Olympics: பார்வையாளர்கள் இல்லாமல் போட்டிகள்; எமர்ஜென்சியை அறிவித்தது ஜப்பான்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR