புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் துணைத் தலைவரும், மாநிலங்கள் அவைத் தலைவருமான எம் வெங்கையா நாயுடு, மற்றும் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோர் கூட்டாக சன்சத் டிவியை இன்று (செப்டம்பர் 15) மாலை 6 மணிக்கு  துவக்கி வைக்க உள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

2021, பிப்ரவரி மாதம் மக்களவைக்கான லோக்சபா டிவி மற்றும் மாநிலங்கள் அவைக்கான ராஜ்ய சபா டிவி ஆகிய சானல்களை ஒன்றிணைக்க, 2021 முடிவு செய்யப்பட்டது. மார்ச் 2021 சன்சாத் டிவியின் தலைமை நிர்வாக அதிகாரி நியமிக்கப்பட்டார். சன்சத் டிவி நிகழ்ச்சிகள் முக்கியமாக நான்கு பிரிவுகளை அடிப்படையாக கொண்டதாக இருக்கும் - பாராளுமன்றம் மற்றும் ஜனநாயக அமைப்புகளின் செயல்பாடு, இந்தியாவின் திட்டங்கள்/கொள்கைகளை செயல்படுத்துதல், வரலாறு மற்றும் கலாச்சாரம் மற்றும் இயற்கை தொடர்பான பிரச்சினைகள்/ஆர்வங்கள்/கவலைகள்.


மக்களவை தொலைக்காட்சி (LSTV) 2006 ஜூலை 2006 தொடங்கப்பட்டது, மக்கள் தங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் பாராளுமன்றத்தில் என்ன சொல்கிறார்கள் என்பதை அறியும் உரிமை உள்ளது என்ற நோக்கில் தொடங்கப்பட்டது. முன்னாள் மக்களவை சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜியின் சிந்தனைதான் 24x7 பாராளுமன்ற சேனல்  அறிமுகம் என்பது குறிப்பிடத்தக்கது.


ராஜ்யசபா டிவி (RSTV), மாநிலங்கள் அவையின் நடவடிக்கைகளை உள்ளடக்கியது, ராஜ்யசபாவுக்கு சொந்தமான மற்றும் இயக்கப்படும் ஒரு பொது கேபிள் தொலைக்காட்சி சேனல் ஆகும். ராஜ்யசபாவின் நிகழ்வுகளின் நேரடி ஒளிபரப்பைத் தவிர, சேனல் அறிவை மேம்படுத்தும் அடிப்படையிலான நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்பும்.


மக்களவை டிவி (லோக்சபா டிவி) மற்றும் மாநிலங்களவை டிவி (ராஜ்யசபா டிவி) ஆகிய இரண்டும் ஒன்றிணைக்கப்பட்டு `சன்சத் டிவி என்ற பெயரில் இனி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும். எனினும், நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் காலங்களில் மட்டும் 2 சேனல்களாக இதுசெயல்படும்.