Happy Birthday PM Modi!! மரம் நடுதல், இரத்ததான முகாம்களுடன் கொண்டாடப்படும் பிரதமரின் பிறந்தநாள்!!
இன்று நம் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பிறந்தநாள். இதையொட்டி, நாடு முழுவதும் பல கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புதுடில்லி: இன்று நம் பாரத பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) அவர்களின் பிறந்தநாள். இதையொட்டி, நாடு முழுவதும் பல கொண்டாட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
2014 முதல், பிரதமர் மோடியின் (PM Modi) பிறந்த நாள் வரும் வாரத்தை பாஜக 'சேவா சப்தா' என்று கொண்டாடி வருகிறது. இந்த ஆண்டு, 'சேவா சப்தா' செப்டம்பர் 14 அன்று தொடங்கியது. அது, செப்டம்பர் 20 வரை தொடரும்.
இந்த 'வாராந்திர' கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் 70 இடங்களில் மரம் வளர்ப்பு மற்றும் இரத்ததான முகாம்களை கட்சி ஏற்பாடு செய்துள்ளது.
கடந்த ஒரு வாரமாக, பாஜக (BJP) தொண்டர்கள், ஏழை மக்களுக்கு ரேஷன் விநியோகம், இரத்த தான முகாம்களை ஏற்பாடு செய்தல் மற்றும் கண் பரிசோதனை முகாம்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனனர்.
உத்தரபிரதேசத்தின் (Uttar Pradesh) கௌதம் புத் நகரில் உள்ள சாப்ராலி கிராமத்தில் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா (JP Nadda) 'சேவா சப்தா' –வை துவக்கி வைத்தார். நாடு முழுவதும் கட்சித் தலைவர்கள் மற்றும் தொழிலாளர்களால் பல சமூக சேவைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
புதுடெல்லியின் (New Delhi) ஆதர்ஷ் நகர், மஜ்லிஸ் பார்க் முகாமில் பாகிஸ்தானில் இருந்து வந்த இந்து அகதிகளுக்கு தையல் இயந்திரங்கள், இ-ரிக்ஷாக்கள் மற்றும் உணவுப் பொருட்களை விநியோகிப்பது உள்ளிட்ட பல திட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
ALSO READ: Happy Birthday PM Modi: காவிய நாயகனின் காலம் கடந்த புகைப்படங்களின் தொகுப்பு
பல்வேறு சமூக அமைப்புகளுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த விழாவில் மத்திய அமைச்சர்கள் கிரிராஜ் சிங், டாக்டர் ஜிதேந்திர சிங், எம்.பி. மனோஜ் திவாரி ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
தமிழ்நாட்டின் (Tamil Nadu) கோவையில் உள்ள பாரதிய ஜனதா தொண்டர்கள் சிவன் காமாட்சி அம்மன் கோவிலில் சிவபெருமானுக்கு 70 கிலோகிராம் லட்டு ஒன்றை நெய்வேதியம் செய்து அதை மக்களுக்கு விநியோகித்தனர்.
பிரதமர் மோடியின் 70 வது பிறந்தநாளை முன்னிட்டு இந்து சேனா, புது தில்லி, ராஜேந்திர பிரசாத் சாலை, சிவசக்தி மந்திரில் காலை 10:30 மணிக்கு ஒரு ஹோமத்துக்கும் ஏற்பாடு செய்து வருகிறது. அதைத் தொடர்ந்து காலை 11 மணிக்கு கேக் வெட்டும் நிகழ்ச்சி நடக்கும்.
ALSO READ: News Tidbits செப்டம்பர் 16: இன்றைய சில முக்கியமான செய்திகள்...
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR
Apple Link - https://apple.co/3loQYeR