பிரதமர் மோடியும் பூட்டான் பிரதமரும் 2ம் கட்ட RuPay கார்டு திட்டத்தை தொடக்கினர்..!!!
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பூட்டான் பிரதமர் லொட்டே ஷெரிங் இரண்டாம் கட்ட RuPay கார்டு திட்டத்தை அறிமுகப்படுத்தினர்.
பிரதமர் நரேந்திர மோடி, பூட்டானிய பிரதமர் லொட்டே ஷெரிங் உடன் இணைந்து, இரண்டாம் கட்ட ரூபே கார்ட் திட்டத்தை இன்று அறிமுகப்படுத்தினார். இதன் மூலம் பூட்டான் குடிமக்கள் இந்தியாவில் உள்ள ரூபே நெட்வொர்க்கை பயன்படுத்திக் கொள்ள முடியும்.
முதல் கட்ட ரூபே கார்ட் (RuPay Card) திட்டம் 2019 இல் தொடங்கப்பட்டது. 2019 ஆம் ஆண்டில், பூட்டான் யாத்திரையின் போது முதல் கட்ட ரூபே கார்ட் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அறிமுகப்படுத்தினார். முதல் கட்டத்தின் கீழ், இந்திய குடிமக்கள் பூட்டானின் ஏடிஎம்கள் மற்றும் பாயிண்ட் ஆஃப் சேல் மெஷின்களில் (PoS) பரிவர்த்தனை ரூபே கார்ட்டை பயன்படுத்த முடிந்தது.
இந்த சூழலில், வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையில், முதல் கட்டத்தில், இந்திய (India) குடிமக்கள் ஏடிஎம் நெட்வொர்க்கைப் பயன்படுத்த பூட்டான் முழுவதும் ரூபே அட்டைகளைப் பயன்படுத்தலாம், இரண்டாவது கட்டத்தில், இந்தியாவில் பூட்டானிய குடிமக்கள் ஏடிஎம் நெட்வொர்க்குகளைப் பயன்படுத்த ரூபே அட்டைகளைப் பயன்படுத்தலாம்.
ரூபே அட்டை என்றால் என்ன?
இது ஒரு உள்நாட்டு பிளாஸ்டிக் அட்டை, இது இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) அறிமுகப்படுத்தியது. கட்டண முறைகளை ஒருங்கிணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. எஸ்பிஐ போன்ற முக்கிய வங்கிகள் முதல் நாட்டின் அனைத்து முக்கிய வங்கிகள் வரை ரூபே டெபிட் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. ஐக்கிய அரபு எமிரேட்ஸ்(UAE), மேற்கு ஆசியாவில் இந்திய மின்னணு முறைகளை ஏற்றுக்கொண்ட முதல் நாடு என்ற பெருமையை பெற்றது.
இதற்கிடையில், பூட்டான் பிரதமர் லோட்டே ஷெரிங் நரேந்திர மோடியை ( PM Narendra Modi) பாராட்டி, தொற்று நோயை கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கை எடுத்து வருகிறார் என்றும், இந்தியா தொற்றுநோயிலிருந்து மிகவும் வலுவாக வெளிப்படும் என்று நான் நம்புவதாகவும் கூறினார். தடுப்பூசி தயாரிக்கும் பணியில், இந்தியா ஒரு முன்னணியில் உள்ளது, நம் அனைவருக்கும் நம்பிக்கையின் ஆதாரமாக உள்ளது. பூட்டானுக்கு தடுப்பூசி வழங்குவதற்கான உத்தரவாதத்திற்கு இந்தியாவிற்கும், இந்திய அரசாங்கத்திற்கும் பூட்டான் கடமைபட்டுள்ளது என்று பூட்டான் பிரதமர் மேலும் கூறினார்.
ALSO READ | மும்பை தாக்குதல் சூத்திரதாரி ஹபீஸ் சயீத்திற்கு 10 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை..!!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR