தீபாவளித் திருநாள் நாடு முழுதும் நாளை கொண்டாட்டப்படும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த வருட தீபாவளியில், நம் நாட்டை அல்லும் பகலும் அயராது உழைத்து பாதுகாக்கும் வீரர்களுக்காக ஒரு விளக்கை ஏற்றுமாறு, பிரதமர் மோடி மக்களிடம் முறையிட்டுள்ளார்.


நாளை நாடு முழுவதும் தீபாவளி கொண்டாட உள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi)  நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.  வீரர்களின் வீரத்திற்காக, தியாகத்திற்காக, தைரியத்திற்காக, நம் இதயத்தில் தோன்றும்  நன்றியுணர்வின் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. எல்லையில் பணியில் உள்ள படை வீரர்களின் ஒவ்வொரு  குடும்பங்களுக்கும் நாம் கடமைப்பட்டுள்ளோம்.


இந்த திருவிழாக் காலங்களில் எல்லையில் நின்று தாய் நாட்டிற்கு சேவை செய்து பாதுகாத்து வரும் நமது வீரர்களை நாம் மறக்காமல் நாங்கள் நினைவில் கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார். நம் பண்டிகை காலங்களில் அவர்களை நினைவில் வைத்துக் கொண்டாட வேண்டும். படையினரை பற்றி குறிப்பிட்ட அவர், நீங்கள் எல்லையில் இருந்தாலும், நாட்டு மக்கள் அனைவரும் உங்களுடன் இருக்கிறார்கள், உங்களை பெரிதும் நேசிக்கிறார்கள் என்று கூறினார். எல்லையில் காவல் காத்து நிற்கும் அந்த மகன்கள் மற்றும் மகள்களின், அந்த குடும்பங்களின் தியாகத்திற்கு நான் வணக்கம் செலுத்துகிறேன் என அவர் கூறினார்.



ALSO READ | இந்த தீபாவளியையும் பிரதமர் மோடி எல்லையில் ராணுவ வீரர்களுடன் கொண்டாடக்கூடும்


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR