ஆட்சியில் இருந்த போது பாசன திட்டங்களை நிறைவேற்றாமல் தற்போது விவசாயிகளுக்காக முதலை கண்ணீர் வடிக்கிறது எதிர்கட்சிகள் -பிரதமர் மோடி தாக்கு! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி உத்திரபிரதேசத்தின் மிர்சாபூர் நகரில் பன்சாகர் கால்வாய் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார். இத்திட்டம் அலகாபாத் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளுக் லட்சக்கணக்கான விவசாயிகளுக்கும் பயன்தருவதாக அவர் தெரிவித்துள்ளார். 


இதை தொடர்ந்து பேசத்துவங்கிய அவர், இந்த கால்வாய் திட்டம் சுமார் 171 கிலோ மீட்டர் நீளமுள்ள கால்வாய் நெட்வொர்க் இப்பகுதியில் நீர்ப்பாசனத்தை அதிகரிக்கும் என்றும் அவர் வாக்குறுதியளித்துள்ளார். மேலும் இது ஒரு லட்சம் 70 ஆயிரம் விவசாயிகளுக்கு உதவும் என்று கூறினார். விவசாயத்திற்காக தனது அற்பநிப்புகியால் அவர் சுட்டிக்காடுகையில், எதிர்கட்சிகளின் குற்றங்களையும் அவர் சுட்டிகாட்டியுள்ளார். 


விவசாயிகள் பெயரில் அரசியல் செய்பவர்களுக்கு, அவர்கள் உற்பத்தி செய்யும் பொருளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த நேரம் இல்லை. அவர்கள் கோப்புகளையே பார்த்து கொண்டிருந்தனர் என்று அவர் கூறினார்.விவசாயிகளுக்காக முதலை கண்ணீர் வடிப்பவர்களிடம், அவர்களது ஆட்சி காலத்தில் பாசன திட்டங்களை ஏன் நிறைவேற்றவில்லை என கேள்வி எழுப்ப வேண்டும் என்று அவர் கூறினார்.



நீரை மிச்சப்படுத்துவதன் மூலம் விவசாயிகள் இரு மடங்கு பலன் கிடைக்கும். நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலை 1.5 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், பூர்வாஞ்சல் விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்யும் நெல் குவின்டால் ஒன்றுக்கு கூடுதலாக 200 கோடி ரூபாய் கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்!