PM Narendra Modi Cabinet Portfolio: பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்ற சூழலில், மத்திய அமைச்சர்களின் இலாகாக்கள் குறித்த விவரங்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரதமர் மோடிக்கு என்ன அமைச்சகம்...?


பணியாளர்கள், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்; அணுசக்தி துறை; விண்வெளி துறை; அனைத்து முக்கியமான கொள்கை சிக்கல்கள்; மற்றும் எந்த அமைச்சருக்கும் ஒதுக்கப்படாத மற்ற அனைத்து துறைகளையும் பிரதமர் மோடியின் பொறுப்பாகும்.


யார் யாருக்கு என்ன அமைச்சகம்?


அந்த வகையில், ராஜ்நாத் சிங்கும் பாதுகாப்பு துறை அமைச்சராக தொடர்கிறார். மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக நிதின் கட்கரி தொடர்கிறார். வெளியுறவுத்துறை அமைச்சராக ஜெய்சங்கர் தொடர்கிறார். நிதியமைச்சராக நிர்மலா சீதாராமனும் தொடர உள்ளார்.


ஜிதன் ராம் மஞ்சி சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சராகவும், சிவராஜ் சிங் சௌகான் வேளாண் துறை மற்றும் ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து எந்தெந்த துறை யார் யார் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளனர் என்பதை இதில் காணலாம். 


மேலும் படிக்க | Modi 3.0: கேபினட்டில் மத்திய அமைச்சர்களாக இருக்கும் 6 முன்னாள் முதல்வர்கள்... யார் யார் தெரியுமா?


30 கேபினட் அமைச்சர்கள்


ராஜ்நாத் சிங்: பாதுகாப்பு துறை


அமித் ஷா: உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை


நிதின் கட்கரி: சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை


ஜேபி நட்டா: சுகாதாரத் துறை மற்றும் இரசாயனங்கள் மற்றும் உரத்துறை


சிவராஜ் சிங் சவுகான்: வேளாண் துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறை


நிர்மலா சீதாராமன்: நிதித் துறை மற்றும் கார்ப்பரேட் துறை


எஸ் ஜெய்சங்கர்: வெளியுறவுத் துறை


மனோகர் லால் கட்டார்: நகர்ப்புற மேம்பாட்டு, வீட்டு வசதித்துறை & மின் துறை


ஹெச்.டி குமாரசாமி: கனரக தொழில் துறை


பியூஷ் கோயல்: வர்த்தகத் துறை


தர்மேந்திர பிரதான்: கல்வித் துறை


ஜிதன் ராம் மஞ்சி: சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை


ராஜீவ் ரஞ்சன் (லாலன்) சிங்: பஞ்சாயத்து ராஜ், மீன்வளம், கால்நடை வளர்ப்பு மற்றும் பால் பண்ணை.


சர்பானந்தா சோனோவால்: கப்பல் போக்குவரத்துறை


கிஞ்சராபு ராம் மோகன் நாயுடு: விமான போக்குவரத்துறை


வீரேந்திர குமார்: சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை


ஜுவல் ஓரம்: பழங்குடியின நலத்துறை


பிரகலாத் ஜோஷி: உணவு மற்றும் நுகர்வோர் விவகாரம், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறை


கிரிராஜ் சிங்: ஜவுளி துறை


அஸ்வினி வைஷ்ணவ்: ரயில்வே துறை மற்றும் தகவல் மற்றும் ஒலிபரப்பு, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம்


ஜோதிராதித்ய சிந்தியா: தகவல் தொடர்புதுறை, வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டுத் துறை


பூபேந்திர யாதவ்: சுற்றுச்சூழல் துறை


கஜேந்திர சிங் ஷெகாவத்: சுற்றுலா மற்றும் கலாச்சார துறை


அன்னபூர்ணா தேவி: பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறை


கிரண் ரிஜிஜு: நாடாளுமன்ற விவகாரத் துறை


மன்சுக் மாண்டவியா: தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறை


ஹர்தீப் சிங் பூரி: பெட்ரோலியத் துறை


ஜிகே ரெட்டி: நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை


சிராக் பாஸ்வான்: உணவு பதப்படுத்தும் தொழில் துறை


சிஆர் பாட்டீல்: ஜல் சக்தி துறை


மேலும் படிக்க | மோடி பதவியேற்பில் இதை கவனிச்சீங்களா? அமித் ஷாவுக்கு முன் பதவியேற்ற ராஜ்நாத் சிங் - சூட்சமம் இருக்கு!


தனிப்பொறுப்பு இணையமைச்சர்கள்


ராவ் இந்தர்ஜித் சிங் - புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்ககத்துறை  , கலாச்சாரத்துறை 


ஜிதேந்திர சிங் - அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் , புவி அறிவியல், பிரதமர் அலுவலக விவகாரம், தொழிலாளர் நலன் , அணுசக்தித் துறை, விண்வெளித் துறை


அர்ஜுன் ராம் மேக்வால் - சட்டம் மற்றும் நீதித்துறை, நாடாளுமன்ற விவகாரம் 


ஜாதவ் பிரதாப்ராவ்  - ஆயுஷ், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை 


ஜெயந்த் சவுத்ரி - திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் துறை , கல்வித்துறை 


இணைஅமைச்சர்கள்


ஜிதின் பிரசாத் - வர்த்தகம் மற்றும் தொழில் துறை , மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்.


ஸ்ரீபாத் நாயக் - மின்சாரம் , புதுப்பிக்கத்தக்க ஆற்றல்


பங்கஜ் சவுத்ரி - நிதித்துறை 


கிரிஷன் பால் குர்ஜார் - ஒத்துழைப்பு அமைச்சகம்.


ராம்தாஸ் அத்வாலே - சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல்.


ராம்நாத் தாக்கூர் - விவசாயம் மற்றும் விவசாயிகள் நலன்.


நித்யானந்த் ராய் - உள்துறை 


அனுப்ரியா பட்டேல் - குடும்பநலத்துறை , இரசாயனம் மற்றும் உரங்கள்.


வி சோமண்ணா - ஜல்சக்தி , ரயில்வே


சந்திர சேகர் பெம்மாசானி - ஊரக வளர்ச்சி , தகவல் தொடர்பு 


எஸ்பி சிங் பாகேல் - மீன்வளம், கால்நடை வளர்ப்பு மற்றும் பால் பண்ணை, பஞ்சாயத்ராஜ் 


ஷோபா கரந்த்லாஜே - சிறுகுறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு


கீர்த்தி வர்தன் சிங் - சுற்றுச்சூழல், காடு மற்றும் காலநிலை மாற்றம், வெளியுறவு விவகாரத்துறை 


பிஎல் வர்மா - நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல்.


சாந்தனு தாக்கூர் - துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள்.


கமலேஷ் பாஸ்வான் -  ஊரக வளர்ச்சி 


பண்டி சஞ்சய் குமார் - உள்துறை 


அஜய் தம்தா: சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள்


டாக்டர் எல் முருகன் - தகவல் மற்றும் ஒளிபரப்பு, பாராளுமன்ற விவகாரங்கள்


மேலும் படிக்க | மத்திய அமைச்சரவையின் டாப் பணக்காரர்... யார் அந்த சந்திரசேகர் பெம்மசானி..!!


சுரேஷ் கோபி - பெட்ரோலியம், சுற்றுலாத்துறை 


ரவ்னீத் சிங் பிட்டு - உணவு பதப்படுத்துதல் , ரயில்வே 


சஞ்சய் சேத் - பாதுகாப்புத்துறை 


ரக்ஷா காட்சே - இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை 


பகீரத் சௌத்ரி - விவசாயம் மற்றும் விவசாயிகள் நலன்.


சதீஷ் சந்திர துபே - நிலக்கரி மற்றும் சுரங்கம் 


துர்காதாஸ் உய்கே - பழங்குடியினர் விவகாரம் 


சுகந்தா மஜும்தார் - கல்வித்துறை , வடகிழக்கு பிராந்திய வளர்ச்சி


சாவித்ரி தாக்கூர் - பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு.
 
டோகன் சாஹு - வீட்டுவசதி மற்றும் ஊரக விவகாரங்கள்.


ராஜ் பூஷன் சௌத்ரி - ஜல்சக்தி 


பூபதி ராஜு ஸ்ரீனிவாச வர்மா - கனரக தொழில், எஃகு 


ஹர்ஷ் மல்ஹோத்ரா: கம்பெனி விவகாரம், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள்


நிமுபென் பாம்பானியம் - நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம்.


முரளிதர் மோஹோல் - விமான போக்குவரத்து 
 
ஜார்ஜ் குரியன் - சிறுபான்மையினர் நலன் , மீன்வளம், கால்நடை வளர்ப்பு மற்றும் பால் பண்ணை.


பபித்ரா மார்கெரிட்டா - வெளியுறவுத்துறை, ஜவுளித்துறை


மேலும் படிக்க | மோடி பதவியேற்பு விழாவில் சிறுத்தையா...? வீடியோவில் தெரியும் மர்ம விலங்கு - வைரல்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ