ஃபிடல் காஸ்ட்ரோ மரணம்- பிரதமர் மோடி இரங்கல்
கியூபா முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ தனது 90வது வயதில் காலமானார்.
புதுடெல்லி: கியூபா முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ தனது 90வது வயதில் காலமானார்.
கியூபாவில் ஏறத்தாழ அரை நூற்றாண்டுக்காலம், பிரதமராகவும், அதிபராகவும் பதவி வகித்தவர் பிடல் காஸ்ட்ரோ. இவர் வயோதிகத்தின் காரணமாக தனது சகோதரர் ராவுல் காஸ்ட்ரோவிடம் கடந்த 2008-ம் ஆண்டு ஆட்சியை ஒப்படைத்து விட்டு ஓய்வு எடுத்து வந்தார்.
உடல் நலக்குறைவினால் பாதிக்கப்பட்டு இருந்த பிடல் காஸ்ட்ரோ கியூபா நேரப்படி இரவு 10.30 மணியளவில் உயிரிழந்தார். ஃபிடல் காஸ்ட்ரோ காலமானதாக அவரது சகோதரரும், கியூபாவின் அதிபருமான ராவுல் காஸ்ட்ரோ அறிவித்துள்ளார். கியூபாவின் அரசுத் தொலைக்காட்சியும் இந்த செய்தியை உறுதி செய்துள்ளது.
ஃபிடல் காஸ்ட்ரோவின் மறைவுக்கு உலகம் முழுவதும் உள்ள தலைவரக்ள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் ஃபிடல் காஸ்ட்ரோ மறைவுக்கு தனது டுவிட்டரில் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.