AIADMK Symbol And Flag News: இந்திய தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு இரட்டை இலைச் சின்னத்தை ஒதுக்கிய விவகாரத்தில் புகழேந்தி டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்த நிலையில், இந்த வழக்கை இன்று விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் இந்திய தேர்தல் அணையத்துக்கு பரபரப்பான உத்தரவை பிறப்பித்துள்ளது.
சமீபத்தில் அதிமுக கட்சியின் சின்னம், கொடியை பயன்படுத்த எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு இந்திய தேர்தல் ஆணயம் உத்தரவிட்டதற்கு எதிராக வழக்குகள் இன்னும் நிலுவையில் இருந்தாலும், தேர்தல் ஆணைய உத்தரவு படி கட்சியின் கொடி, சின்னத்தை எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக தான் பயன்படுத்தி வருகிறது.
இதற்கிடையே தான் இரட்டை இலைச் சின்னத்தை எடப்பாடி பழனிச்சாமிக்கு வழங்கியதில் நீதிமன்ற உத்தரவுகளை தேர்தல் ஆணயம் பின்பற்றவில்லை எனவும் தான் வழங்கிய மனுக்களை பரிசீலனை செய்யாமலேயே தேர்தல் ஆணயம் செயல்பட்டுள்ளது எனவும் கூறி அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட புகழேந்தி சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மேலும் இந்த நீதிமன்றம் அவமதிப்பு வழக்கு இந்திய தேர்தல் ஆணையத்துக்கு எதிராக தொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற இன்றைய விசாரணையில் எடப்பாடி பழனிச்சாமி சார்பில் வழக்கறிஞர் பாலாஜி ஸ்ரீனிவாசன் ஆஜராகி வாதாடுகையில், எங்கள் தரப்பை எதிர்மனுதாரராக சேர்க்கவில்லை. மேலும் கட்சிக்கு தொடர்பில்லாத புகழேந்தி சார்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இதனால் இந்த மனுவை ஏற்கக் கூடாது என்று ஆட்சேபனை தெரிவித்தார். ஆனால் இதனை உயர்நீதிமன்ற நீதிபதி மனோஜ் ஏற்க மறுத்துவிட்டார்.
அதே நேரத்தில் இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் இந்த விவகாரம் தொடர்பாக புகழேந்திக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறோம். வரும் 24 ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையத்தின் விசாரணைக்கு வரும்படி அழைப்பு விடுத்துள்ளோம் என்று கூறப்பட்டது. அதற்கு புகழேந்தி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கார்த்திக் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்த பிறகே விசாரணைக்கு அழைப்பாணை வழங்கப்பட்டு உள்ளது. இதனால் இரட்டை இலை சின்னம் தொடர்பாக நிலுவையில் உள்ள மனுவை விசாரிக்க இந்திய தேர்தல் ஆணையத்துக்கு காலக்கேடு வழங்க வேண்டும் என்று வாதித்தார்.
இந்த வாதங்களை கேட்ட டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி மனோஜ் இரட்டை இலைச் சின்னம் தொடர்பான மனுக்களை விசாரித்து விரைந்து தீர்வு காண வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு எந்த காலக்கெடுவையும் விதிக்க முடியாது எனக் கூறி வழக்கை முடித்து வைத்திருக்கிறார்.
இந்த நிலையில் தான் அதிமுகவின் இரட்டை இலைச் சின்னம் முடங்கும் வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க - இந்த அட்டை வைத்திருந்தால் ஆண் / பெண் இருவரும் மாதம் ரூ.1000 உதவித்தொகை பெறலாம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ