இந்தியாவின் முதல் நீருக்கடியிலான மெட்ரோ வழித்தடத்தை பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi) இன்று கொல்கத்தாவில் திறந்து வைத்தார். இந்த நீருக்கடியில் சேவை கொல்கத்தா மெட்ரோவின் கிழக்கு-மேற்கு நடைபாதையின் ஹவுரா மைதானம்-எஸ்பிளனேட் வழித்தடத்தின் ஒரு பகுதியாகும். இந்த மெட்ரோ ரெயில் வழித்தட பாதை ஹூக்ளி ஆற்றின் அடியில் ஆற்று தண்ணீர் மட்டத்தில் இருந்து சுமார் 16 மீட்டர் ஆழத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. ஹூக்ளி ஆற்றின் அடியில் செல்லும் இந்த மெட்ரோ ரயில் பாதை 16.6 கிலோ மீட்டர் தூரத்திற்கான வழித்தட பாதை. நீருக்கடியிலான இந்த மெட்ரோ மூலம் ஹூக்ளி ஆற்றின் கீழ் 520 மீட்டர் நீளத்தை வெறும் 45 வினாடிகளில் கடக்கலாம். 4,965 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட ஹவுரா மைதானத்தில் இருந்து எஸ்பிளனேட் வரையிலான கிழக்கு-மேற்கு மெட்ரோ பாதையின் நீளம் 4.8 கிலோ மீட்டர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இரட்டை நகரங்களான ஹவுரா மற்றும் சால்ட் லேக்கை இணைக்கும் மெட்ரோ


மேற்கு வங்க மாநில தலைநகரின் இரட்டை நகரங்கள் என அழைக்கப்படும் ஹவுரா மற்றும் சால்ட் லேக்கை இணைக்கும் இந்த நீருக்கடியிலான மெட்ரோ பாதையில் (Underwater Metro) மூன்று நிலத்தடி நிலையங்கள் உள்ளன.  சாலைப் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், இரு நகரத்திற்கு இடையில், தடையற்ற, எளிதான மற்றும் வசதியான இணைப்பை வழங்கவும் உதவும் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. வங்காள ஆளுநர் டாக்டர். சி.வி. ஆனந்த போஸ் மற்றும் பிற உயர் மட்ட அதிகாரிகளும் கலந்து கொண்ட தொடக்க விழாவில் கலந்து கொண்டனர்.  


பள்ளி மாணவர்கள் ஆகியோருடன் மெட்ரோ ரயிலில்  பயணம் பிரதமர் மோடி


மேலும், மெட்ரோ சேவையை தொடக்கி வைத்த பிரதமர் மோடி, மாநில பாஜக தலைவர் சுகந்தா மஜூம்டர் மற்றும் மேற்கு வங்காளத்தின் எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து ஆதிகாரி,  பள்ளி மாணவர்கள் ஆகியோருடன் மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார். நீருக்கடியிலான ரயில் பயணத்தின் போது மெட்ரோ ஊழியர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். 


மேலும் படிக்க | விமான நிலையத்தில் உங்கள் லக்கேஜ் சேதமடைந்தால் என்ன செய்ய வேண்டும்?


ஹூக்ளி ஆற்றின் நீருக்கடியில் சுரங்கப்பாதை


நீருக்கடியிலான இந்த மெட்ரோவில், சுமார் 10.8 கிலோமீட்டர் பாதை நிலத்தடியாகவும், அதே நேரத்தில் 5.75 கிலோமீட்டர் தூரம், தரைநிலையிலிருந்து உயர்த்தப்பட்டதாக இருக்கும். இந்த திட்டம் கொல்கத்தாவில் போக்குவரத்து நெரிசலை கணிசமாக குறைக்கும் என்று ரயில்வே அமைச்சகம் குறிப்பிட்டது. ஹூக்ளி ஆற்றின் நீருக்கடியில் சுரங்கப்பாதைக்கு அடியில் மெட்ரோ ரயில்களின் சோதனை ஓட்டம் கடந்த ஆண்டு கொல்கத்தா மெட்ரோவால் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. முதலில் 2021ம் ஆண்டிற்குள் முடிக்க திட்டமிடப்பட்ட இந்தத் திட்டம், மத்திய கொல்கத்தாவின் பவ்பஜாரில் சுரங்கப்பாதை அமைக்கும் பணியின் போது ஏற்பட்ட விபத்துக்களால் தாமதமானது குறிப்பிடத்தக்கது.


 ஹூக்ளி ஆற்றின் சுரங்கங்களை தோண்டும் பணி


ஆற்றின் அடியில் மெட்ரோ ரயில் இயக்கப்படும் இந்தியாவின் முதல் போக்குவரத்து திட்டமான இதன் சுரங்கப்பாதையை, கட்டுமான நிறுவனமான ஆஃப்கான்ஸ் (Afcons) மற்றும் ரஷ்ய நிறுவனமான டிரான்ஸ்டோனெல்ஸ்ட்ராய் (Transtonnelstroy ) இணைந்து  அமைத்துள்ளனர். ஹூக்ளி சுரங்கங்களை தோண்டும் பணியை தொடக்கி அஃப்கான்ஸ் 2017 ஏப்ரல் மாதம் தொடங்கி,  2017 ஜூலை மாதம் முடித்தனர்.


மேலும் படிக்க | வருமானத்தை அள்ளிக் கொடுக்கும்... தபால் அலுவலகத்தின் சிறந்த 5 திட்டங்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ