அனைத்தும் உடைந்த நிலையிலும் உங்கள் உறுதி உடையவில்லை: IT Sector-க்கு PM Modi புகழாரம்
பிப்ரவரி 17 ஆம் தேதி அதாவது இன்று தொடங்கிய இந்த இரண்டு நாள் உச்சி மாநாடு இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப (IT) நிறுவனங்களின் தொழில் அமைப்பின் முதன்மை நிகழ்வாகும்.
புதுடெல்லி: தேசிய மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களின் சங்கம் (NASSCOM) தொழில்நுட்பம் மற்றும் தலைமை (NLT) நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை வீடியோ கான்பரன்சிங் மூலம் உரையாற்றினார்.
"அனைவரும் மிகவும் துவண்ட நிலையில் இருந்தபொது, உங்கள் குறியீடுகள்தான் (Codes) உலகை இயங்க வைத்தன" என்று மோடி தனது தொடக்க உரையில் கூறினார். அனைத்து துறைகளும் கீழ் நோக்கி பயணித்த வேளையில், ஐ.டி துறையில் ஏற்பட்ட 2% வருவாய் வளர்ச்சியை பிரதமர் பாராட்டினார்.
வளர்ச்சி பாதிக்கப்பட்டிருந்த நேரத்தில் இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் துறை (IT Sector) அதன் வருவாயில் 4 பில்லியன் டாலர்களைச் சேர்த்தது பாராட்டத்தக்கது என்று மோடி மேலும் தெரிவித்தார்.
தொற்றுநோய்களின் போது ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிக்கும் டிஜிட்டல் சவாலை அளவிட நிறுவனங்களுக்கு உதவுவதில் இந்தியாவின் தொழில்நுட்பத் துறை வகித்த பங்கை அவர் பாராட்டினார்.
"இது உலகத்தை முன்பை விட அதிக நம்பிக்கையுடனும் எதிர்பார்ப்புகளுடனும் பார்க்கும் காலம். எவ்வளவு கடினமான சவாலாக இருந்தாலும், நாம் நம்மை பலவீனமானவர்கள் என்று நினைக்கக்கூடாது, சவால்களுக்கு பயந்து விலகிச் செல்லக்கூடாது. COVID இன் போது, நமது அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் தன்னை நிரூபித்தது மட்டுமல்ல மேலும் வலுவாகியுள்ளது” என்று பிரதமர் மோடி (PM Modi) மேலும் கூறினார்.
பிரதமரின் உரைக்கு முன், IBM நிறுவனத்தின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான அரவிந்த் கிருஷ்ணா, HCL டெக்னாலஜிஸின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான சி. விஜயகுமார், அக்சென்சரின் தலைமை நிர்வாக அதிகாரி ஜுலி ஸ்வீட், சியண்டின் தலைமை நிர்வாக அதிகாரி கார்த்திகேயன் நடராஜன் ஆகியோரும் உரையாற்றினர்.
ALSO READ: Tamil Nadu: எண்ணெய், எரிவாயு துறையின் பல செயல்திட்டங்களை துவக்கி வைக்கிறார் பிரதமர்
பிப்ரவரி 17 ஆம் தேதி தொடங்கிய இந்த இரண்டு நாள் உச்சி மாநாடு இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப (IT) நிறுவனங்களின் தொழில் அமைப்பின் முதன்மை நிகழ்வாகும்.
உச்சிமாநாட்டின் 29 வது பதிப்பின் கருப்பொருள் 'எதிர்காலத்தை ஒரு நல்ல இயல்பை நோக்கி வடிவமைப்பது' என்பதாகும். இந்த நிகழ்வில் 30 க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 1600 நிபுணர்கள் பங்குகொள்ள வாய்ப்புள்ளது.
தொற்றுநோய்களின் போது தகவல் தொழில்நுட்பத் துறை செயல்திறன் உலகளாவிய தொற்றுநோய்க்குப் பின்னர் நிறுவனங்களிடமிருந்து டிஜிட்டல் உருமாற்றம் தேவைப்படுவதால் ஐ.டி துறை வலுவான கோரிக்கையை கண்டது.
இந்த ஆண்டில் கோவிட் -19 (COVID-19) சீர்குலைவு இருந்தபோதிலும், தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்த துறை கிட்டத்தட்ட 8% பங்களிப்பை வழங்கியுள்ளது. வர்த்தக ஏற்றுமதி அமைப்பின் தரவுகளின் படி, இத்துறை, சேவை ஏற்றுமதியில் 52 சதவீதமும் மொத்த வெளிநாட்டு நேரடி முதலீட்டில் 50 சதவீதமும் பங்களிப்பு செய்துள்ளது.
2020-21 நிதியாண்டில் (FY21) தகவல் சேவைத் துறையின் வருவாய் வளர்ச்சியை 2.3% ஆக நாஸ்காம் கணித்துள்ளது.
ஐடி நிறுவனங்களின் வருவாய் 2020 ஆம் நிதியாண்டில் 190 பில்லியன் டாலராக இருந்தது. அது 2021 ஆம் நிதியாண்டில் 194 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
ALSO READ: புதுவை கவர்னர் கிரண் பேடி நீக்கம்; தெலுங்கானா கவர்னர் தமிழிசைக்கு கூடுதல் பொறுப்பு
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR