பகவத் கீதையின் கையெழுத்து பிரதிகளை வெளியிட்டார் பிரதமர் மோடி
இந்த நூலில் பகவத் கீதையில் உள்ள ஸ்லோகங்களுக்கு 21 அறிஞர்கள் கொடுத்துள்ள விளக்கங்களும் இடம் பெற்றுள்ளன.
பகவத் கீதையின் 11 தொகுதி கையெழுத்துப் பிரதிகளை பிரதமர் திரு. நரேந்திர மோடி புதுதில்லியில் இன்று வெளியிட்டார்.
இந்த நூலில் பகவத் கீதையில் உள்ள ஸ்லோகங்களுக்கு 21 அறிஞர்கள் கொடுத்துள்ள விளக்கங்களும் இடம் பெற்றுள்ளன.
பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi) இல்லத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், இந்த கையெழுத்து பிரதிகள் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஜம்மு கஷ்மீர் துணை நிலை ஆளுநர் திரு. மனோஜ் சின்ஹா, தர்மார்த் அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் கரண் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர். டாக்டர் கரண் சிங், காங்கிரஸ் கட்சியின் பழம் பெரும் தலைவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அப்போது எதிர்க்கட்சியை தாக்கி பேசிய, பிரதமர் நரேந்திர மோடி, சிலர் தங்கள் "அரசியல் ஆதாயத்திற்காக" இந்தியாவின் அரசியலமைப்பு அமைப்புகளின் கவுரவத்தையும் நம்பகத்தன்மையையும் அழிக்க முயற்சி செய்கிறார்கள். அவர்கள் தேசிய நீரோட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்று கூறினார்.
நாடாளுமன்றம் (Parliament) , நீதித்துறை, ராணுவம் என எதையும் அரசியல் ஆதாயத்திற்காக தாக்கி பேசும் போக்கு காணப்படுகிறது என பிரதமர் மோடி, கூறினார்.
கோவிட் -19 (COVID -19) தொற்றுநோய் நெருக்கடி உள்ள இந்த காலகட்டத்தில், இந்தியா(India), பல நாடுகளுக்கு வழங்கிய உதவிகளைப் பற்றி பிரதமர் பேசினார். பல நாடுகளுக்கு எந்த நிபந்தனையும் இல்லாமல் மருந்துகள் மற்றும் இப்போது தடுப்பூசிகளை அனுப்பி, கீதையில் கூறப்பட்டுள்ளதை இந்தியா கடைபிடித்துள்ளது என்றார். பகவத் கீதை என்னும் காவியம் மனிதகுலத்திற்கு தன்னலமற்ற சேவையை கற்பித்திருக்கிறது என்றார் பிரதமர்.
ஜம்மு கஷ்மீர் துணை நிலை ஆளுநர் திரு. மனோஜ் சின்ஹாவின் பணியை பாராட்டிய பிரதமர் மோடி, அவரது முயற்சி ஜம்மு-காஷ்மீரின் அடையாளத்தை புதுப்பித்துள்ளது என்றார்.
ALSO READ | இந்தியா, பங்களாதேஷ் இடையே ‘மைத்ரி சேது’ பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார்
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR