காங்கிரஸின் சிந்தனை வளர்ச்சிக்கு எதிரானது.. 70 ஆண்டுகளாக எதுவும் செய்யவில்லை -பிரதமர் மோடி
PM Modi in Barmer: நாட்டின் அணு ஆயுதங்களை ஒழிக்க இந்தியக் கூட்டணி விரும்புகிறது. இந்தக் கூட்டணி இந்தியாவை சக்தியற்றதாக மாற்றும் என என்று பிரதமர் கூறினார்.
Rajasthan, Loksabha Election 2024: லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் வேளையில், எதிர்க்கட்சிகள் மீதான தாக்குதல்களை பிரதமர் மோடி தீவிரப்படுத்தி உள்ளார். ராஜஸ்தான் மாநிலம் பார்மரில் நடந்த தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், நாட்டுக்காக தங்கள் ரத்தத்தை வாரி இறைத்தவர்கள் ராஜஸ்தான் மக்கள், அந்த ராஜஸ்தானை தண்ணீர் தாகத்தில் தவிக்க வைத்தது காங்கிரஸ் என்று பிரதமர் கூறினார். காங்கிரஸ் அரசு ராஜஸ்தானில் இருந்தவரை, ஜல் ஜீவன் மிஷனிலும் பெருத்த ஊழலில் ஈடுபட்டது. காங்கிரஸின் சிந்தனை வளர்ச்சிக்கு எதிரானது என்று மோடி கூறினார்.
ராஜஸ்தான் பார்மர் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியது..
இந்தத் தேர்தல் கட்சிக்கானது அல்ல, இது நாட்டின் தேர்தல். எனவேதான் இன்று நாடு முழுவதும் 400 பார் (400-க்கும் அதிகமான இடங்களில் வெற்றி) என்ற முழக்கம் ஒலிக்கிறது. எனவே தான் மீண்டும் மோடி அரசு வேண்டும். நாட்டின் எதிரிகளுக்கு பாடம் புகட்டுங்கள், பார்மரை வெற்றி பெறச் செய்வது எங்கள் பொறுப்பு என்று இங்குள்ள மக்கள் என்னிடம் எப்போதும் கூறி வருகின்றனர். இதைப்பார்க்கும் போது முன்பை விட இம்முறையும் பாஜகவை அதிக வாக்குகளுடன் வெற்றி பெறச் செய்வீர்கள் என்பது எனது உறுதியான நம்பிக்கையாக இருக்கிறது.
மேலும் படிக்க - தமிழ்நாட்டில் பாஜக எத்தனை விழுக்காடு வாக்குகள் வாங்கும்?
காங்கிரஸின் சிந்தனையே வளர்ச்சிக்கு எதிரானது -மோடி
70 ஆண்டுகளாக இந்த தாய்மார்கள் மற்றும் சகோதரிகளை யாரும் கண்டு கொள்ளவில்லை என்று பிரதமர் மோடி கூறினார். உங்கள் மகன் மோடிக்கு சேவை செய்ய நீங்கள் வாய்ப்பு கொடுத்தபோது, ஜல் ஜீவன் மிஷனைத் தொடங்கி இந்த அவலத்தை முடிவுக்குக் கொண்டுவர நான் முன்முயற்சி எடுத்தேன். ராஜஸ்தானில் 50 லட்சம் வீடுகளுக்கு தண்ணீர் சப்ளை செய்துள்ளோம். ஆனால் காங்கிரஸ் அரசு ராஜஸ்தானில் ஆட்சியில் இருக்கும் வரை ஜல் ஜீவன் திட்டத்திலும் பெரும் ஊழலில் ஈடுபட்டது. காங்கிரஸின் சிந்தனையே வளர்ச்சிக்கு எதிரானது என்றார்.
எதிரி நாட்டினரிடம் பயப்படுற அளவுக்கு கோழைகளா நாம்?
இந்த மக்கள் வசிக்கும் நாட்டின் எல்லை கிராமங்களை.. நாட்டின் கடைசி கிராமங்கள் என்று அழைக்கிறார்கள். இந்த மக்களின் எல்லையோர மாவட்டங்கள் மற்றும் எல்லையோர கிராமங்களின் வளர்ச்சியை வேண்டுமென்றே பறித்தனர். எல்லை கிராமங்கள் வளர்ச்சி அடைந்தால், எதிரிகள் (பாகிஸ்தான்) நாட்டிற்குள் வந்து ஆக்கிரமிக்கும் வாய்ப்பு அதிகரிக்கும் என்றும் கூறினார். ஒரு நல்ல சாலை அமைத்தால் எதிரிகள் அதில் ஏறிவிடுவார்கள் என்கிற அளவுக்கு கோழைகளா நாம்?
நாட்டின் முதல் கிராமம்.. எல்லைக் கிராமம் தான் -பிரதமர் மோடி
எல்லைப் பகுதிகளையும், எல்லைக் கிராமங்களையும் கடைசி கிராமங்களாகக் கருதாமல் நாட்டின் முதல் கிராமங்களாகக் கருதுகிறோம். நம்மைப் பொறுத்தவரை நாட்டின் எல்லைகள் இங்கு முடிவதில்லை, மாறாக நாடு இங்கிருந்து தொடங்குகிறது. இன்று, நாட்டில் 4 கோடி ஏழைகளுக்கு பிரதமர் வீடு கிடைத்துள்ளது என்றால், எனது பார்மரில் 2.25 லட்சம் ஏழைகளுக்கு நிரந்தர வீடுகள் கிடைத்துள்ளன.
மேலும் படிக்க - இந்து தர்மத்தை அழிக்கவே காங்கிரஸ், திமுக உள்ளது-பிரதமர் மோடி வேலூரில் பேச்சு!
காங்கிரசால் புறக்கணிக்கப்பட்டவர்களை உங்கள் மோடி வணங்குகிறார்
மேலும் பிரதமர் தனது உரையில், ராஜஸ்தான் விமான நிலையங்களிலும் முந்தைய அரசாங்கம் நிறைய தடைகளை உருவாக்கியது. காங்கிரஸ் தேவையில்லாத முற்றுக்கட்டை போடாமல் இருந்திருந்தால், இங்குள்ள விமான நிலையம் 2 ஆண்டுகளுக்கு முன்பே செயல்பட்டிருக்கும். பல தசாப்தங்களாக யாரை பேச்சையும் காது குடுத்து காங்கிரஸ் கேட்கவில்லை. ஆனால் உங்கள் மோடி வணங்குகிறார்.
இந்தியா கூட்டணிக்கு பொய் பேசுவது ஃபேஷன் ஆகிவிட்டது -மோடி
எங்கள் பழங்குடியின சமூகத்தின் குழந்தைகள் முன்னேற, நாங்கள் ஏக்லவ்யா மாதிரி குடியிருப்புப் பள்ளியைத் திறக்கிறோம். பல தசாப்தங்களாக SC/ST மற்றும் OBC சகோதர, சகோதரிகளுக்கு எதிராக பாகுபாடு காட்டிய காங்கிரஸ், தேர்தல் வரும்போதெல்லாம், இந்தியா கூட்டணியின் அனைத்துக் கட்சிகளும் அரசியல் சாசனத்தின் பெயரால் பொய் பேசுவது ஒரு ஃபேஷன் ஆகிவிட்டது.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை விமர்சித்த பிரதமர் மோடி
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில், பிரிவினையின் குற்றவாளியான முஸ்லீம் லீக்கின் முத்திரை உள்ளது. இப்போது இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் மற்றொரு கட்சி, இந்தியாவின் அணு ஆயுதங்களை அழிப்போம் என்று தங்கள் தேர்தல் அறிக்கையில் நாட்டுக்கு எதிராக ஆபத்தான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தியாவுக்கு அணுசக்தியை வழங்கிய பொக்ரான் பூமி, இப்போது இந்தியாவின் அணு ஆயுதங்களை அழிப்போம் என்று இந்தியக் கூட்டணி கூறுகிறது. நமது அண்டை நாடுகளில் இருவர் அணு ஆயுதம் வைத்திருக்கும் போது, நமது அணு ஆயுதங்கள் அழிக்கப்பட வேண்டுமா? இந்தியாவை சக்தியற்றதாக மாற்ற நினைக்கும் இது என்ன வகையான கூட்டணி? எனப் பேசினார்.
மேலும் படிக்க - அதெல்லாம் பொய்யுங்க.. நாங்க சொல்வது தான் உண்மை -தேர்தல் பேரணியில் முழங்கிய அமித் ஷா
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ