பிரதமர் நரேந்திர மோடி (Prime Minister Narendra Modi ) தலைமையிலான 13வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டை மெய்நிகர் நிகழ்ச்சியாக நடைபெறும். பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ (Jair Bolsanaro), தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா ( Cyril Ramaphosa), ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் (Vladimir Putin) மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் (Xi Jinping)ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உச்சிமாநாட்டின் கருப்பொருள் `BRICS@15: தொடர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் ஒருமித்த கருத்துக்கான பிராக்ஸ் நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு ' என்பதாகும். காபூலை தலிபான்கள் கைப்பற்றியதைத் தொடர்ந்து நிலவும் சூழ்நிலை குறித்தும், அதனால் ஏற்பட்டுள்ள பயங்கரவாத அச்சுறுத்தல்கள் குறித்தும், உச்சி மாநாட்டின் போது விவாதிக்கப்படும்.


பிரிக்ஸ் உச்சிமாநாட்டு குறித்த தகவலை நன்கு அறிந்த வட்டாரங்கள் ANI இடம் கூறியதாவது: 
ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட முக்கிய உலகளாவிய மற்றும் பிராந்திய பிரச்சனைகள் குறித்து பிரிக்ஸ் நாடுகள் தலைவர்கள் ஆலோசனை செய்வார்கள், இதில் தலைவர்கள் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைக்கு முக்கியவத்துவம் கொடுக்கவும், ஆப்கானிஸ்தானை அடைக்கமாக பயன்படுத்த பயங்கரவாத அமைப்புகள் மேற்கொள்ளும் முயற்சிகளை தடுப்பது, மற்ற நாடுகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தவதை தடுப்பது உள்ளிட்ட விஷயங்கள் விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது.


ALSO READ | புதிய ITR போர்ட்டலில் சிக்கல் தீர்ந்ததா; வருமான வரித் துறை கூறுவது என்ன..!!


BRICS (பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா) உச்சிமாநாட்டிற்கு பிரதமர் மோடி (PM Modi) தலைமை வகிப்பது இது இரண்டாவது முறையாகும். முன்னதாக, அவர் 2016 ஆம் ஆண்டு கோவாவில் உச்சிமாநாட்டிற்கு தலைமை தாங்கினார். மேலும் பிரிக்ஸ் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. 


இந்த கூட்டத்தில் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ந்யூ டெல்வலெப்மெண்ட் பேங்க் தலைவர் மார்கோஸ் ட்ராய்ஜோ, பிரிக்ஸ் பெண்கள் வணிக கூட்டணியின் தலைவர், சங்கீதா ரெட்டி ஆகியோர் கலந்து கொள்கின்றனர். கடந்த ஆண்டு நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டை ரஷ்யா நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.


ALSO READ | எய்ம்ஸில் மூக்கின் வழி செலுத்தும் BBV154 கொரோனா தடுப்பு மருந்தின் 2/3ம் கட்ட பரிசோதனை


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR